• Nov 19 2024

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை உயர்வு...!

Sharmi / Jul 17th 2024, 9:04 am
image

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினிகபி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நீதி நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 26,500 கைதிகள் சிறையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சுமார் 1700 சிறைக்காவலர்கள் பற்றாக்குறை நிலவுவதுடன் 900 பேரை பணியமர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை நீண்டகாலமாகவே காணப்படுவதாகவும், இந்தப் புதிய ஆட்சேர்ப்பின் பின்னர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.


 

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை உயர்வு. சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினிகபி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நீதி நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 26,500 கைதிகள் சிறையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் தேவை அதிகரித்துள்ளது.இந்நிலையில் சுமார் 1700 சிறைக்காவலர்கள் பற்றாக்குறை நிலவுவதுடன் 900 பேரை பணியமர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை நீண்டகாலமாகவே காணப்படுவதாகவும், இந்தப் புதிய ஆட்சேர்ப்பின் பின்னர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement