• Feb 14 2026

சீரற்ற வானிலையால் அதிகரித்த நீரோட்டம்; நாயாறு படகுச்சேவை முற்றாக நிறுத்தம்!

shanuja / Dec 9th 2025, 5:38 pm
image


முல்லைத்தீவு -  நாயாறு களப்பின் ஊடான படகுச்சேவை முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

 

நாயாறு களப்பில் நீரோட்டம் அதிகரித்துள்ளதால், கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட இலவச படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

 

அத்துடன், சீரற்ற வானிலை நிலவுவதால் பாதுகாப்பற்ற கடற்பயணங்களைத் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.


நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் சீரற்ற வானிலையால் நாடு முழுவதும் பல பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற வானிலையால் அதிகரித்த நீரோட்டம்; நாயாறு படகுச்சேவை முற்றாக நிறுத்தம் முல்லைத்தீவு -  நாயாறு களப்பின் ஊடான படகுச்சேவை முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  நாயாறு களப்பில் நீரோட்டம் அதிகரித்துள்ளதால், கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட இலவச படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  அத்துடன், சீரற்ற வானிலை நிலவுவதால் பாதுகாப்பற்ற கடற்பயணங்களைத் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் சீரற்ற வானிலையால் நாடு முழுவதும் பல பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement