நாட்டில் கடந்த ஓகஸ்ட் மாதம் இறுதி வரையான காலப்பகுதியில், சிறுவர்கள் தொடர்பாக 6,500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதனால், நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறுவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு, தேசிய கட்டமைப்பை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும், சிறுவர்களுடன் தொடர்புடைய முறைப்பாடுகளைக் காணொளிகளாக சேகரிப்பதற்கான பிரிவு ஒன்றை நிறுவத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது ராகம மற்றும் கொழும்பு பகுதிகளில் முறைப்பாடுகள் குறித்தான காணொளி ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, இந்த ஆண்டு சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பாக 1,459 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர்கள் துன்புறுத்தல் தொடர்பாக 1,315 சம்பவங்களும், குழந்தைகளின் கட்டாயக் கல்வி உரிமை மறுக்கப்பட்டமை குறித்து 1,083 சம்பவங்களும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 372 சம்பவங்களும், ஆலோசனை மற்றும் உளவியல் சார்ந்த 366 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அத்துடன், சிறுவர்களுக்கு எதிரான இணையவியல் வன்முறை தொடர்பாக 92 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய சிறுவர்கள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள் நாட்டில் கடந்த ஓகஸ்ட் மாதம் இறுதி வரையான காலப்பகுதியில், சிறுவர்கள் தொடர்பாக 6,500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதனால், நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறுவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு, தேசிய கட்டமைப்பை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும், சிறுவர்களுடன் தொடர்புடைய முறைப்பாடுகளைக் காணொளிகளாக சேகரிப்பதற்கான பிரிவு ஒன்றை நிறுவத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது ராகம மற்றும் கொழும்பு பகுதிகளில் முறைப்பாடுகள் குறித்தான காணொளி ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, இந்த ஆண்டு சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பாக 1,459 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவர்கள் துன்புறுத்தல் தொடர்பாக 1,315 சம்பவங்களும், குழந்தைகளின் கட்டாயக் கல்வி உரிமை மறுக்கப்பட்டமை குறித்து 1,083 சம்பவங்களும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 372 சம்பவங்களும், ஆலோசனை மற்றும் உளவியல் சார்ந்த 366 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், சிறுவர்களுக்கு எதிரான இணையவியல் வன்முறை தொடர்பாக 92 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய சிறுவர்கள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.