• Dec 19 2024

பொலிஸ் வாகன கொள்வனவுக்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் நன்கொடை

Chithra / Dec 19th 2024, 3:09 pm
image


இலங்கை பொலிஸ் வாகனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவியாக 300 மில்லியன் ரூபாவை நிதி மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

இந்த உதவித்தொகையை பயன்படுத்தி வடமாகாண பொலிஸ் நிலையங்களின் கடமை தேவைகளுக்காக கெப் வாகனங்களை கொள்வனவு செய்தவற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நன்கொடையை பெற்றுக்கொள்வதற்காக இரு தரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

பொலிஸ் வாகன கொள்வனவுக்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் நன்கொடை இலங்கை பொலிஸ் வாகனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவியாக 300 மில்லியன் ரூபாவை நிதி மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.இந்த உதவித்தொகையை பயன்படுத்தி வடமாகாண பொலிஸ் நிலையங்களின் கடமை தேவைகளுக்காக கெப் வாகனங்களை கொள்வனவு செய்தவற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, குறித்த நன்கொடையை பெற்றுக்கொள்வதற்காக இரு தரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement