• Sep 20 2024

இந்தியாவிலிருந்து 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி! SamugamMedia

Tamil nila / Feb 22nd 2023, 11:57 am
image

Advertisement

பேக்கரி தொழிலுக்கு முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், முட்டை ஒன்றின் விலை 48 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


இந்த தட்டுப்பாடு காரணமாக அடுத்த வாரத்திற்குள் முட்டை இறக்குமதி செய்யப்படும் என தலைவர் தெரிவித்தார். நாளொன்றுக்கு 55 இலட்சம் முட்டை தேவைப்படுகின்ற போதிலும் 50 இலட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்தார்.



அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் சமீலா இந்தமல்கொட தெரிவித்துள்ளார்.


குறித்த முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் கால்நடை வள பிரிவின் அனுமதி கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி SamugamMedia பேக்கரி தொழிலுக்கு முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், முட்டை ஒன்றின் விலை 48 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.இந்த தட்டுப்பாடு காரணமாக அடுத்த வாரத்திற்குள் முட்டை இறக்குமதி செய்யப்படும் என தலைவர் தெரிவித்தார். நாளொன்றுக்கு 55 இலட்சம் முட்டை தேவைப்படுகின்ற போதிலும் 50 இலட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்தார்.அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் சமீலா இந்தமல்கொட தெரிவித்துள்ளார்.குறித்த முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் கால்நடை வள பிரிவின் அனுமதி கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement