• Apr 30 2026

டிஜிட்டல் மோசடிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா!

Ziya / Apr 30th 2026, 11:36 am
image

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், மறுபுறம் டிஜிட்டல் நிதி மோசடிகளால் (Digital Financial Frauds) இந்தியர்கள் சுமார் 25 பில்லியன் அமெரிக்க டொலர் சுமார் ₹2,10,000 கோடி அளவிலான பெரும் தொகையை 2025-ஆம் ஆண்டில் மட்டும் இழந்துள்ளதாகத்க சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த நிலையைக்கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மோசடிக்காரர்கள் பெரும்பாலும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களைப் போன்ற போலி இணைப்புகளை குறுஞ்செய்திகள் ஊடாக அனுப்பி வருகின்றனர்.


உதாரணமாக, போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துமாறு கோரி அனுப்பப்படும் செய்திகளில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்த முற்படும்போது, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் திருடப்படுகின்றது.


எவ்வாறாயினும், சட்டங்களினால் மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்த முடியாது என்றும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களுடன் நுகர்வோர் விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.


டிஜிட்டல் மோசடிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், மறுபுறம் டிஜிட்டல் நிதி மோசடிகளால் (Digital Financial Frauds) இந்தியர்கள் சுமார் 25 பில்லியன் அமெரிக்க டொலர் சுமார் ₹2,10,000 கோடி அளவிலான பெரும் தொகையை 2025-ஆம் ஆண்டில் மட்டும் இழந்துள்ளதாகத்க சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த நிலையைக்கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மோசடிக்காரர்கள் பெரும்பாலும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களைப் போன்ற போலி இணைப்புகளை குறுஞ்செய்திகள் ஊடாக அனுப்பி வருகின்றனர்.உதாரணமாக, போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துமாறு கோரி அனுப்பப்படும் செய்திகளில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்த முற்படும்போது, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் திருடப்படுகின்றது.எவ்வாறாயினும், சட்டங்களினால் மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்த முடியாது என்றும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களுடன் நுகர்வோர் விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement