• Sep 20 2024

இலங்கைக்கான உணவு ஆதரவை மீண்டும் வலியுறுத்தும் இந்தியா! samugammedia

Tamil nila / Aug 5th 2023, 9:28 pm
image

Advertisement

இலங்கைக்கான உணவு ஆதரவை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்தியா, இலங்கை, மியன்மார் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன் கோதுமை, அரிசி, பருப்பு வகைகள் மற்றும் உணவு உதவிகளை வழங்கியுள்ளது.

இந்தநிலையில் உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மை நிலைமை அச்சுறுத்தலாக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புசபையில் இந்தியா அறிவித்துள்ளது.

எனவே குறித்த நாடுகளுக்கு உதவ சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று பாதுகாப்பு சபைக்கான இந்தியாவின் தூதுவர் ருச்சிரா காம்போஜ் எடுத்துரைத்தார்.

ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின்படி, 62 நாடுகளில் 362 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.

எனினும் உணவு உதவியை நீண்ட கால அடிப்படையில் முன்னெடுக்க முடியாது என்று காம்போஜ் வலியுறுத்தினார்.

ஆகவே உணவுப் பாதுகாப்பின்மைக்கு நிலையான தீர்வு அவசியம் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.


இலங்கைக்கான உணவு ஆதரவை மீண்டும் வலியுறுத்தும் இந்தியா samugammedia இலங்கைக்கான உணவு ஆதரவை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.ஏற்கனவே இந்தியா, இலங்கை, மியன்மார் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன் கோதுமை, அரிசி, பருப்பு வகைகள் மற்றும் உணவு உதவிகளை வழங்கியுள்ளது.இந்தநிலையில் உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மை நிலைமை அச்சுறுத்தலாக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புசபையில் இந்தியா அறிவித்துள்ளது.எனவே குறித்த நாடுகளுக்கு உதவ சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று பாதுகாப்பு சபைக்கான இந்தியாவின் தூதுவர் ருச்சிரா காம்போஜ் எடுத்துரைத்தார்.ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின்படி, 62 நாடுகளில் 362 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.எனினும் உணவு உதவியை நீண்ட கால அடிப்படையில் முன்னெடுக்க முடியாது என்று காம்போஜ் வலியுறுத்தினார்.ஆகவே உணவுப் பாதுகாப்பின்மைக்கு நிலையான தீர்வு அவசியம் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement