• Dec 03 2024

ஐ.நா.வின் காலநிலை நிதி ஒப்பந்தத்தை நிராகரித்த இந்தியா

Tharmini / Nov 25th 2024, 9:33 am
image

காலநிலை மாற்ற மாநாட்டில் (COP29) முன்மொழியப்பட்ட புதிய காலநிலை நிதித் திட்டத்தை இந்தியா நிராகரித்துள்ளது.

குளோபல் சவுத் நாடுகளுக்கு 2035 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 300 பில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என இந்த தொகுப்பு உறுதியளிக்கிறது.

மேலும் தெரியவருவதாவது, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை சார்ந்த பிரச்சினைகளை சமாளிக்கவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகின்றன. 

இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை நிதி தொகுப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிதி தொகுப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம். 

அந்த வகையில், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர் வழங்க இலக்கு நிர்ணயிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக அஜர்பைஜானில் நடைபெற்ற காலநிலை மாநாட்டின் நிறைவு நாளில் நிதி தொகுப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஐ.நா.வின் காலநிலை நிதி ஒப்பந்தத்தை நிராகரித்த இந்தியா காலநிலை மாற்ற மாநாட்டில் (COP29) முன்மொழியப்பட்ட புதிய காலநிலை நிதித் திட்டத்தை இந்தியா நிராகரித்துள்ளது.குளோபல் சவுத் நாடுகளுக்கு 2035 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 300 பில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என இந்த தொகுப்பு உறுதியளிக்கிறது.மேலும் தெரியவருவதாவது, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை சார்ந்த பிரச்சினைகளை சமாளிக்கவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகின்றன. இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை நிதி தொகுப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது.இந்த நிதி தொகுப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர் வழங்க இலக்கு நிர்ணயிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.இது தொடர்பாக அஜர்பைஜானில் நடைபெற்ற காலநிலை மாநாட்டின் நிறைவு நாளில் நிதி தொகுப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement