• Dec 08 2024

இலங்கை - இந்திய கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைப்பு

Chithra / May 12th 2024, 3:07 pm
image

தமிழ்நாடு நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறை நாளை 13 ஆம் திகதி தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 'செரியாபாணி' என்ற   பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து 'செரியாபாணி' கப்பலுக்கு மாற்றாக 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட மற்றொரு பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு நாளை தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

நாகைக்கு வரவேண்டிய பயணிகள் கப்பல் தாமதமானதால் வரும் 17 ஆம் திகதி வரை இச்  சேவை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

முன்பதிவு செய்த பயணிகள் 17 ஆம் திகதி பயணிக்கலாம் அல்லது பயண திகதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை - இந்திய கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைப்பு தமிழ்நாடு நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறை நாளை 13 ஆம் திகதி தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 'செரியாபாணி' என்ற   பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இதையடுத்து 'செரியாபாணி' கப்பலுக்கு மாற்றாக 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட மற்றொரு பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு நாளை தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாகைக்கு வரவேண்டிய பயணிகள் கப்பல் தாமதமானதால் வரும் 17 ஆம் திகதி வரை இச்  சேவை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முன்பதிவு செய்த பயணிகள் 17 ஆம் திகதி பயணிக்கலாம் அல்லது பயண திகதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement