• Jan 15 2025

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு புதிய அணுகுமுறைகளுடன் மீண்டும் பேச்சு! அநுர அரசு முடிவு

Chithra / Jan 15th 2025, 9:18 am
image

 

இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்காக  மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.   

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியத் தரப்பும் தயாராக உள்ளது. 

தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் விடயங்களை முன்னெடுப்பதற்கு நாமும் தயாராகவே உள்ளோம். 

ஆனால் அடுத்து வரும் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையுடன், இந்திய அதிகாரிகளுடன் விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது கூட இந்த விவகாரம் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது மட்டும் போதாது. 

எனவே, இந்திய அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். 

இந்தியப் பெருங்கடலுக்கு ஏற்படும் சேதங்கள் காரணமாக பெரும்பாலான தென்னிந்திய மீனவர்களும் சட்டவிரோதமான மீன்படி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவே உள்ளனர், 

இருப்பினும் ஒரு சில மீனவர்கள் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோத நடைமுறைகளில் ஈடுபடுகிறார்கள்.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய அடிமட்ட இழுவைப் படகுகளால் உள்ளுர் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் 700 மில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது என்றார்.


இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு புதிய அணுகுமுறைகளுடன் மீண்டும் பேச்சு அநுர அரசு முடிவு  இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்காக  மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.   இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியத் தரப்பும் தயாராக உள்ளது. தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் விடயங்களை முன்னெடுப்பதற்கு நாமும் தயாராகவே உள்ளோம். ஆனால் அடுத்து வரும் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையுடன், இந்திய அதிகாரிகளுடன் விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது கூட இந்த விவகாரம் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது மட்டும் போதாது. எனவே, இந்திய அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்தியப் பெருங்கடலுக்கு ஏற்படும் சேதங்கள் காரணமாக பெரும்பாலான தென்னிந்திய மீனவர்களும் சட்டவிரோதமான மீன்படி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவே உள்ளனர், இருப்பினும் ஒரு சில மீனவர்கள் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோத நடைமுறைகளில் ஈடுபடுகிறார்கள்.2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய அடிமட்ட இழுவைப் படகுகளால் உள்ளுர் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் 700 மில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement