• Nov 28 2024

யாழில் தமிழ் எம்.பிக்களுடன், இரவோடு இரவாக இந்தியா அவசர சந்திப்பு...!

Tamil nila / Feb 17th 2024, 6:49 am
image

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புதிய இந்தியத் தூதுவர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.



இந்த சந்திப்பில் அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.கே.சிவஞானம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் தரப்பினரும், சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.



இதேவேளை, இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.சந்தோஷ் ஜாவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.


யாழில் தமிழ் எம்.பிக்களுடன், இரவோடு இரவாக இந்தியா அவசர சந்திப்பு. வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புதிய இந்தியத் தூதுவர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பில் அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.கே.சிவஞானம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் தரப்பினரும், சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.இதேவேளை, இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.இதன் போது போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.சந்தோஷ் ஜாவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement