• Nov 22 2024

தமிழ் கட்சிகளை சந்தித்த இந்திய தூதர்...! விக்கினேஸ்வரன் புறக்கணிப்பு...!samugammedia

Sharmi / Jan 23rd 2024, 8:29 am
image

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் கொழும்பில் நேற்றையதினம்(22) இரண்டு மணிநேரம் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

இந்தியத் தூதரகத்தின் அழைப்புக்கிணங்க இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், 

தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,சுரேஷ் பிரேமச்சந்திரன்,கோவிந்தன் கருணாகரம்,எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மேற்படி சந்திப்பில் பங்கேற்கவில்லை. 

இம் மூன்று தலைவர்களும் கலந்துகொள்ளாமைக்கான காரணங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவித்தல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கட்சிகளை சந்தித்த இந்திய தூதர். விக்கினேஸ்வரன் புறக்கணிப்பு.samugammedia இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் கொழும்பில் நேற்றையதினம்(22) இரண்டு மணிநேரம் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.இந்தியத் தூதரகத்தின் அழைப்புக்கிணங்க இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,சுரேஷ் பிரேமச்சந்திரன்,கோவிந்தன் கருணாகரம்,எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மேற்படி சந்திப்பில் பங்கேற்கவில்லை. இம் மூன்று தலைவர்களும் கலந்துகொள்ளாமைக்கான காரணங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவித்தல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement