• Sep 20 2024

ரஷ்யாவில் வெற்றி அடைந்த இந்திய என்ஜின்கள்! SamugamMedia

Tamil nila / Feb 18th 2023, 1:02 pm
image

Advertisement

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி அமைப்பு கண்டுபிடித்த காவேரி ட்ரை என்ஜின்கள் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட உயர் பறத்தல் பரிசோதனைகளில் வெற்றியை நிலைநாட்டியுள்ளன. 


இது வெவ்வேறு அழுத்தம் மற்றும் வேகத்திற்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. எதிர்பார்க்கப்பட்ட வலு 46kN எனவும், என்ஜின்கள் வெளிக்காட்டிய வலு 48.5kN எனவும் அறியப்பட்டுள்ளது.


இந்த என்ஜின்கள் இந்தியாவின் முதலாவது ஆளில்லா விமானமான கதக் விமானத்திற்கு வலு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் இவற்றுக்கான தகுந்த பரிசோதனைக் கூடம் இல்லாத காரணத்தால் இவை ரஷ்யாவின் பரிசோதனைக் கூடங்களில் சோதனை செய்யப்பட வேண்டி இருந்தமையால் இவற்றின் சோதனைக்கு நீண்ட காலம் எடுக்க வேண்டி இருந்தது.இதன் காரணமாக என்ஜின் பரிசோதனைக்கு கால தாமதம் ஒன்று ஏற்பட்டிருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் கவலையடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த என்ஜின்கள் எதிர்பார்த்ததை விட அதிக வினைத்திறனை வெளிப்படுத்தியுள்ளமை பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் ஆரவாரத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.



ரஷ்யாவில் வெற்றி அடைந்த இந்திய என்ஜின்கள் SamugamMedia இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி அமைப்பு கண்டுபிடித்த காவேரி ட்ரை என்ஜின்கள் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட உயர் பறத்தல் பரிசோதனைகளில் வெற்றியை நிலைநாட்டியுள்ளன. இது வெவ்வேறு அழுத்தம் மற்றும் வேகத்திற்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. எதிர்பார்க்கப்பட்ட வலு 46kN எனவும், என்ஜின்கள் வெளிக்காட்டிய வலு 48.5kN எனவும் அறியப்பட்டுள்ளது.இந்த என்ஜின்கள் இந்தியாவின் முதலாவது ஆளில்லா விமானமான கதக் விமானத்திற்கு வலு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் இவற்றுக்கான தகுந்த பரிசோதனைக் கூடம் இல்லாத காரணத்தால் இவை ரஷ்யாவின் பரிசோதனைக் கூடங்களில் சோதனை செய்யப்பட வேண்டி இருந்தமையால் இவற்றின் சோதனைக்கு நீண்ட காலம் எடுக்க வேண்டி இருந்தது.இதன் காரணமாக என்ஜின் பரிசோதனைக்கு கால தாமதம் ஒன்று ஏற்பட்டிருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் கவலையடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த என்ஜின்கள் எதிர்பார்த்ததை விட அதிக வினைத்திறனை வெளிப்படுத்தியுள்ளமை பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் ஆரவாரத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement