• Nov 25 2024

இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள்...! விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்...!

Sharmi / Feb 23rd 2024, 8:42 am
image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள ஐந்து மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நாளை(24)  காலை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில்  மீனவர்கள் ஈடுபடப்போவதாக தங்கச்சிமடத்தில் நடைபெற்ற மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

 ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீன்பிடி விசைப்படகு ஓட்டுனருக்கு ஆறு மாத கால சிறை தண்டனையும் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், மற்றொரு மீனவருக்கு இரண்டு வருட சிறை தண்டனையும்  விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள ஐந்து ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் நாளை காலை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தங்கச்சிமடத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

 மேலும் கடந்த 16 ஆம் தேதியிலிருந்து  ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மீனவர்களை விடுதலை செய்யும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள். விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள ஐந்து மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நாளை(24)  காலை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில்  மீனவர்கள் ஈடுபடப்போவதாக தங்கச்சிமடத்தில் நடைபெற்ற மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீன்பிடி விசைப்படகு ஓட்டுனருக்கு ஆறு மாத கால சிறை தண்டனையும் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், மற்றொரு மீனவருக்கு இரண்டு வருட சிறை தண்டனையும்  விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள ஐந்து ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் நாளை காலை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தங்கச்சிமடத்தில் இராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். மேலும் கடந்த 16 ஆம் தேதியிலிருந்து  இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மீனவர்களை விடுதலை செய்யும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement