• Nov 22 2024

இந்திய உயர்ஸ்தானிகர்- அமைச்சர் ஜீவன் கொழும்பில் திடீர் சந்திப்பு...!

Sharmi / Mar 1st 2024, 11:21 am
image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை(29) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும், சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

மலையக மறுமலர்ச்சிக்காக இந்தியா வழங்கி வரும் அபிவிருத்திசார் பங்களிப்புகளுக்கும், மலையக மாணவர்களுக்கு இந்தியா வழங்கிவரும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கை, இந்தியாவுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதில் மலையக மக்களுக்குரிய வகிபாகம் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன்  குறிப்பாக பாரத்-லங்கா வீட்டு திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.





 

இந்திய உயர்ஸ்தானிகர்- அமைச்சர் ஜீவன் கொழும்பில் திடீர் சந்திப்பு. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை(29) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும், சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.மலையக மறுமலர்ச்சிக்காக இந்தியா வழங்கி வரும் அபிவிருத்திசார் பங்களிப்புகளுக்கும், மலையக மாணவர்களுக்கு இந்தியா வழங்கிவரும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்தார்.அதேவேளை, இலங்கை, இந்தியாவுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதில் மலையக மக்களுக்குரிய வகிபாகம் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன்  குறிப்பாக பாரத்-லங்கா வீட்டு திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement