• Feb 01 2026

இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்

Chithra / Feb 1st 2026, 10:13 am
image

 

புத்தளம் - வென்னப்புவ பகுதியில் இருந்து பயணம் செய்த இரண்டு படகுகளில் இருந்த 12 கடற்றொழிலாளர் இந்திய கடற்படை அதிகாரிகள் குழுவால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தத் தாக்குதலில் நான்கு கடற்றொழிலாளர்கள் பலத்த காயமடைந்து இலங்கை கடற்படையின் தலையீட்டால் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வென்னப்புவவிலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 'தினிதி துவ' மற்றும் மற்றொரு படகில் இருந்த கடற்றொழிலாளர்கள், சர்வதேச கடற்பரப்பில் தொழிலை முடித்துவிட்டு கடந்த 28ஆம் திகதி காலை இலங்கை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்திய கடற்படைக் கப்பலால் மறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த கடற்றொழிலாளர்களிடம் போதைப்பொருள் இருக்கிறதா என்று வினவி இந்திய கடற்படை அதிகாரிகள் அவர்களைக் கடுமையாகத் தாக்கியதாக பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, 

இந்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கடற்படை மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்  புத்தளம் - வென்னப்புவ பகுதியில் இருந்து பயணம் செய்த இரண்டு படகுகளில் இருந்த 12 கடற்றொழிலாளர் இந்திய கடற்படை அதிகாரிகள் குழுவால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தத் தாக்குதலில் நான்கு கடற்றொழிலாளர்கள் பலத்த காயமடைந்து இலங்கை கடற்படையின் தலையீட்டால் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வென்னப்புவவிலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 'தினிதி துவ' மற்றும் மற்றொரு படகில் இருந்த கடற்றொழிலாளர்கள், சர்வதேச கடற்பரப்பில் தொழிலை முடித்துவிட்டு கடந்த 28ஆம் திகதி காலை இலங்கை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்திய கடற்படைக் கப்பலால் மறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த கடற்றொழிலாளர்களிடம் போதைப்பொருள் இருக்கிறதா என்று வினவி இந்திய கடற்படை அதிகாரிகள் அவர்களைக் கடுமையாகத் தாக்கியதாக பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இந்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கடற்படை மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement