• Apr 16 2026

கிளிநொச்சியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு; தப்பியோடிய டிப்பர் சாரதி

Chithra / Feb 1st 2026, 10:48 am
image

 

கிளிநொச்சியில் பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.


குறித்த டிப்பர் வண்டியை பொலிஸார் சோதனையிட முற்பட்ட போது, பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி வண்டி நிறுத்தப்படாமல் அதிவேகமாக பயணித்துள்ளது.


இதனால், பொலிஸார் டிப்பர் வண்டியை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 


இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக,  டிப்பர் வாகனத்தின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர் என்பன  பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 


மேலும், டிப்பர் வாகனத்தைச் செலுத்திய சாரதி தப்பி ஓடியுள்ளதுடன், 

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கிளிநொச்சியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு; தப்பியோடிய டிப்பர் சாரதி  கிளிநொச்சியில் பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.குறித்த டிப்பர் வண்டியை பொலிஸார் சோதனையிட முற்பட்ட போது, பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி வண்டி நிறுத்தப்படாமல் அதிவேகமாக பயணித்துள்ளது.இதனால், பொலிஸார் டிப்பர் வண்டியை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக,  டிப்பர் வாகனத்தின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர் என்பன  பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மேலும், டிப்பர் வாகனத்தைச் செலுத்திய சாரதி தப்பி ஓடியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement