• May 05 2026

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை வருகை

Chithra / May 4th 2026, 12:30 pm
image

இந்திய கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கோடும், தனது செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டும் இந்திய கடற்படையின் 'INS SINDHUKESARI' நீர்மூழ்கிக் கப்பல் நேற்று  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 


கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பலை, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க மிகச் சிறப்பான முறையில் முறைப்படி வரவேற்றனர்.


இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நீர்மூழ்கிக் கப்பலின் செயல்பாட்டுத் திறனைத் தக்கவைப்பதற்கான மீள்நிரப்பல்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.


 அத்துடன், இக்கப்பலில் வருகை தந்துள்ள குழுவினர், இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு தொழில்முறை சார்ந்த பயிற்சிகள் மற்றும் சமூக நல்லுறவு நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளனர். 


இது இரு நாட்டு கடற்படை வீரர்களுக்கிடையே அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான புரிதலை வளர்க்கவும் ஒரு முக்கிய தளமாக அமையும்.

மேலும், இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இந்திய கடற்படையினர் இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவுள்ளனர். 


இத்தகைய பயணங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கலாச்சார மற்றும் தூதரக உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை வருகை இந்திய கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கோடும், தனது செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டும் இந்திய கடற்படையின் 'INS SINDHUKESARI' நீர்மூழ்கிக் கப்பல் நேற்று  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பலை, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க மிகச் சிறப்பான முறையில் முறைப்படி வரவேற்றனர்.இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நீர்மூழ்கிக் கப்பலின் செயல்பாட்டுத் திறனைத் தக்கவைப்பதற்கான மீள்நிரப்பல்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. அத்துடன், இக்கப்பலில் வருகை தந்துள்ள குழுவினர், இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு தொழில்முறை சார்ந்த பயிற்சிகள் மற்றும் சமூக நல்லுறவு நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளனர். இது இரு நாட்டு கடற்படை வீரர்களுக்கிடையே அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான புரிதலை வளர்க்கவும் ஒரு முக்கிய தளமாக அமையும்.மேலும், இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இந்திய கடற்படையினர் இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவுள்ளனர். இத்தகைய பயணங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கலாச்சார மற்றும் தூதரக உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement