அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT), தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்கள் மற்றும் பேரவையின் நோக்கங்களில் ஆர்வமுள்ளவர்களை உறுப்பினர்களாக இணைந்து, அதன் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
2026 ஜனவரி 24ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட யாப்பின் அடிப்படையில், பேரவையின் முதலாவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக உறுப்பினர் சந்தாக் கட்டணத்தில் 50 சதவீத அறிமுகக் கழிவு முன்மொழியப்பட்டுள்ளதுடன், தேர்தலில் பங்கேற்க விரும்புவோர் நவம்பர் 30ஆம் திகதிக்குள் உறுப்பினர்களாகப் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட தேர்தல் கால அட்டவணை:
நவம்பர் 30, 2026: உறுப்பினர் சேர்க்கைக்கான இறுதித் திகதி.
டிசம்பர் 1–10: பொதுச் சபைக்கான வேட்புமனுத் தாக்கல்.
டிசம்பர் 19: பொதுச் சபைத் தேர்தல் மற்றும் தெரிவான உறுப்பினர்களின் பெயர் வெளியீடு.
டிசம்பர் 20–31: மத்திய குழுப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல்.
ஜனவரி 9, 2027: தலைவர் மற்றும் நாடு அல்லது பிராந்தியத் தலைவர்கள் தெரிவு.
ஜனவரி 30, 2027: ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் வருடாந்த மாநாட்டில் புதிய மத்திய குழு அறிவிப்பு.
பேரவையின் யாப்பின்படி, பொதுச் சபை 100 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இவர்களில் 90 பேர் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படுவதுடன், 10 பேர் தலைவரால் நியமிக்கப்படுவர். தேர்தல் நடவடிக்கைகள் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவின் கண்காணிப்பில் இடம்பெறும்.
இந்தத் தேர்தல் கால அட்டவணை இறுதி ஒப்புதலுக்கும் யாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளுக்கும் உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் சேர்க்கை தொடர்பான விசாரணைகளுக்கு Admin@tamilfederation.org என்ற மின்னஞ்சல் முகவரியையும், மேலதிக தகவல்களுக்கு www.tamilfederation.org என்ற இணையத்தளத்தையும் அணுகலாம்.
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அனைத்துலகத் தமிழர் பேரவை அழைப்பு அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT), தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்கள் மற்றும் பேரவையின் நோக்கங்களில் ஆர்வமுள்ளவர்களை உறுப்பினர்களாக இணைந்து, அதன் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.2026 ஜனவரி 24ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட யாப்பின் அடிப்படையில், பேரவையின் முதலாவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக உறுப்பினர் சந்தாக் கட்டணத்தில் 50 சதவீத அறிமுகக் கழிவு முன்மொழியப்பட்டுள்ளதுடன், தேர்தலில் பங்கேற்க விரும்புவோர் நவம்பர் 30ஆம் திகதிக்குள் உறுப்பினர்களாகப் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முன்மொழியப்பட்ட தேர்தல் கால அட்டவணை:நவம்பர் 30, 2026: உறுப்பினர் சேர்க்கைக்கான இறுதித் திகதி.டிசம்பர் 1–10: பொதுச் சபைக்கான வேட்புமனுத் தாக்கல்.டிசம்பர் 19: பொதுச் சபைத் தேர்தல் மற்றும் தெரிவான உறுப்பினர்களின் பெயர் வெளியீடு.டிசம்பர் 20–31: மத்திய குழுப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல்.ஜனவரி 9, 2027: தலைவர் மற்றும் நாடு அல்லது பிராந்தியத் தலைவர்கள் தெரிவு.ஜனவரி 30, 2027: ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் வருடாந்த மாநாட்டில் புதிய மத்திய குழு அறிவிப்பு.பேரவையின் யாப்பின்படி, பொதுச் சபை 100 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இவர்களில் 90 பேர் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படுவதுடன், 10 பேர் தலைவரால் நியமிக்கப்படுவர். தேர்தல் நடவடிக்கைகள் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவின் கண்காணிப்பில் இடம்பெறும்.இந்தத் தேர்தல் கால அட்டவணை இறுதி ஒப்புதலுக்கும் யாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளுக்கும் உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உறுப்பினர் சேர்க்கை தொடர்பான விசாரணைகளுக்கு Admin@tamilfederation.org என்ற மின்னஞ்சல் முகவரியையும், மேலதிக தகவல்களுக்கு www.tamilfederation.org என்ற இணையத்தளத்தையும் அணுகலாம்.