முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைத்து மாவட்ட தொழிற்துறை மன்றங்களை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (03) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலானது, மாவட்ட மட்டத்தில் தொழிற்துறை மன்றத்தினை உருவாக்கி அதனூடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைத்து அவர்களின் உற்பத்தியை மேம்பட செய்தல், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தொழில் துறையை வளர்த்தல் மற்றும் விற்பனையை பெருக்குதல், சந்தைப்படுத்தலை தூண்டுதல், தொழில்முறைசார் பயிற்சி வழங்குதல், தொழில் வாய்ப்பை ஏற்படுத்தல் முதலான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில், மேலதிக மாவட்ட செயலாளர் சி.குணபாலன்(நிர்வாகம்), வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம். வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் உதவிச் செயலாளர் துசியா, மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் ஜெயகாந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், தொழிற்துறையோடு தொடர்புடைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற கைத்தொழில் அபிவிருத்திக் குழு கூட்டம். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைத்து மாவட்ட தொழிற்துறை மன்றங்களை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (03) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலானது, மாவட்ட மட்டத்தில் தொழிற்துறை மன்றத்தினை உருவாக்கி அதனூடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைத்து அவர்களின் உற்பத்தியை மேம்பட செய்தல், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தொழில் துறையை வளர்த்தல் மற்றும் விற்பனையை பெருக்குதல், சந்தைப்படுத்தலை தூண்டுதல், தொழில்முறைசார் பயிற்சி வழங்குதல், தொழில் வாய்ப்பை ஏற்படுத்தல் முதலான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.இந்தக் கலந்துரையாடலில், மேலதிக மாவட்ட செயலாளர் சி.குணபாலன்(நிர்வாகம்), வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம். வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் உதவிச் செயலாளர் துசியா, மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் ஜெயகாந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், தொழிற்துறையோடு தொடர்புடைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.