ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தொடர்பாக இந்தியாவினால் எதுவும் கூற முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளாதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை ஒருசேரச் சந்தித்திருந்தார்.
இதன்போது பொது வேட்பாளருக்கு ஆதரவான தரப்பினர் இது குறித்து அவரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
இது தொடர்பாகக் கூட்டத்தின் இறுதியில் கருத்து தெரிவித்த ஜெய்சங்கர்,
“பொது வேட்பாளர் தொடர்பாக தம்மால் எதுவும் கூற முடியாது.
அது தமிழ்க் கட்சிகளுக்குள் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய தீர்மானம்” என தெரிவித்ததாக அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான இந்தியா வெளியிட்ட தகவல் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தொடர்பாக இந்தியாவினால் எதுவும் கூற முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளாதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை ஒருசேரச் சந்தித்திருந்தார். இதன்போது பொது வேட்பாளருக்கு ஆதரவான தரப்பினர் இது குறித்து அவரிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இது தொடர்பாகக் கூட்டத்தின் இறுதியில் கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், “பொது வேட்பாளர் தொடர்பாக தம்மால் எதுவும் கூற முடியாது. அது தமிழ்க் கட்சிகளுக்குள் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய தீர்மானம்” என தெரிவித்ததாக அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.