• Nov 26 2024

கடுமையான வெப்பம்...!மலையகத்தில் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவு...!

Sharmi / Mar 1st 2024, 11:48 am
image

மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர்த் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 20 அடி குறைந்துள்ளது.

அதேபோல் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்துள்ளது.

மேல் கொத்மலை கென்யோன்,லக்சபான, பொல்பிட்டிய,கலுகல, விமலசுரேந்திர, நவலக்சபான, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து,  இப் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவுவதால் சகல நீர் தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை பெருந்தோட்ட பகுதிகளில் பாரிய அளவில் சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


கடுமையான வெப்பம்.மலையகத்தில் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவு. மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர்த் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 20 அடி குறைந்துள்ளது.அதேபோல் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்துள்ளது.மேல் கொத்மலை கென்யோன்,லக்சபான, பொல்பிட்டிய,கலுகல, விமலசுரேந்திர, நவலக்சபான, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.தொடர்ந்து,  இப் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவுவதால் சகல நீர் தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை பெருந்தோட்ட பகுதிகளில் பாரிய அளவில் சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement