• Jan 16 2026

பாம்பன் தெற்கு கடல் பகுதியில் மாயமான இரண்டு மீனவர்களைத் தேடும் பணியை போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்துங்கள் - AITUC மீனவர் சங்கம்!

shanuja / Jan 10th 2026, 10:08 pm
image


பாம்பன் தெற்கு கடல் பகுதியில் நேற்று  நாட்டுப் படகில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து மாயமான இரண்டு மீனவர்களை உடனடியாகக் கண்டுபிடிக்க, தேடுதல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என AITUC மீனவர் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.


பாம்பன் சின்னப் பாலம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை கிராமத்தைச் சேர்ந்த டைசன் ஆகிய இருவரும் நேற்று நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், பாம்பன் தெற்கு கடல் பகுதியில் தொழில் செய்து கொண்டிருந்தபோது கடலில் விழுந்து மாயமாகியுள்ளனர்.


இந்த தகவல் அறிந்ததும், சக மீனவர்கள் தங்களது நாட்டுப் படகுகள் மூலம் மாயமான இருவரையும் கடலில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இருப்பினும், தற்போதைய நிலவரப்படி அவர்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காதது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.


எனவே, கடலோரக் காவல் படை மற்றும் இந்தியக் கடற்படை உடனடியாகத் தலையிட்டு, ஹெலிகாப்டர் மற்றும் நவீன தேடுதல் கருவிகள் மூலம் தேடுதல் பணிகளை விரிவுபடுத்த வேண்டும்.


மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்திலும் மனவேதனையிலும் இருப்பதால், அவர்களை உயிருடன் மீட்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.


மேலும், தேடுதல் பணிகளை ஒருங்கிணைக்க பாம்பன் பகுதியில் அரசு–மீனவர் சங்கம் இணைந்த தற்காலிக மீட்பு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட வேண்டும்.


மீனவர்களின் உயிர் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அரசின் முதன்மை பொறுப்பாக இருப்பதால், இந்த விவகாரத்தில் அரசு தாமதமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என AITUC மீனவர் சங்கம் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் தெற்கு கடல் பகுதியில் மாயமான இரண்டு மீனவர்களைத் தேடும் பணியை போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்துங்கள் - AITUC மீனவர் சங்கம் பாம்பன் தெற்கு கடல் பகுதியில் நேற்று  நாட்டுப் படகில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து மாயமான இரண்டு மீனவர்களை உடனடியாகக் கண்டுபிடிக்க, தேடுதல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என AITUC மீனவர் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.பாம்பன் சின்னப் பாலம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை கிராமத்தைச் சேர்ந்த டைசன் ஆகிய இருவரும் நேற்று நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், பாம்பன் தெற்கு கடல் பகுதியில் தொழில் செய்து கொண்டிருந்தபோது கடலில் விழுந்து மாயமாகியுள்ளனர்.இந்த தகவல் அறிந்ததும், சக மீனவர்கள் தங்களது நாட்டுப் படகுகள் மூலம் மாயமான இருவரையும் கடலில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இருப்பினும், தற்போதைய நிலவரப்படி அவர்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காதது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.எனவே, கடலோரக் காவல் படை மற்றும் இந்தியக் கடற்படை உடனடியாகத் தலையிட்டு, ஹெலிகாப்டர் மற்றும் நவீன தேடுதல் கருவிகள் மூலம் தேடுதல் பணிகளை விரிவுபடுத்த வேண்டும்.மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்திலும் மனவேதனையிலும் இருப்பதால், அவர்களை உயிருடன் மீட்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.மேலும், தேடுதல் பணிகளை ஒருங்கிணைக்க பாம்பன் பகுதியில் அரசு–மீனவர் சங்கம் இணைந்த தற்காலிக மீட்பு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட வேண்டும்.மீனவர்களின் உயிர் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அரசின் முதன்மை பொறுப்பாக இருப்பதால், இந்த விவகாரத்தில் அரசு தாமதமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என AITUC மீனவர் சங்கம் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement