• May 20 2024

2024 ஆம் ஆண்டில் வட்டி விகிதம் மற்றும் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..!

Chithra / May 9th 2024, 3:09 pm
image

Advertisement


பல தசாப்தங்களுக்குப் பின்னர், 2023 ஆம் ஆண்டில் கொடுப்பனவுகளின் நடப்புக் கணக்கு உபரியாக உள்ளது. வட்டி விகிதம் 10% - 13% வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்று ஜனாதிபதி இன்று (09) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட  உரையில்  சுட்டிக்காட்டினார். 

தற்போது, ​​நாட்டின் பணவீக்கம் 1.5% வரை வீழ்ச்சியடைந்துள்ளதோடு பல ஆண்டுகளாக பற்றாக்குறையில் இருந்த முதன்மைக் கணக்கின் இருப்பு, 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீத உபரியாக மாற்ற முடிந்தது. 

2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 300 ரூபாவை விட குறைக்க முடிந்ததோடு, அந்நிய செலாவணி கையிருப்பு 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சவாலான, கடினமான ஆனால் சரியான பாதையில் பயணிப்பதால் இந்த நிலையை அடைய முடிந்ததாகக் குறிப்பிட்டார்

2032 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்தக் கடன் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95 வீதமாகக் குறைத்து, அரசாங்கத்தின் மொத்த நிதித் தேவையை வருடாந்தம் 13 வீதமாகக் கொண்டு வருவதும், வெளிநாட்டுக் கடன் சேவையை வருடாந்தம் 4.5 வீத்தைவிட அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதும் கடன் மறுசீரமைப்பின் இறுதி இலக்கு என்று ஜனாதிபதி  குறிப்பிட்டார்

இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் மூன்று சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் இதற்கு நிகரான எதிர்வுகூறல்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தார்

2024 ஆம் ஆண்டில் வட்டி விகிதம் மற்றும் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம். பல தசாப்தங்களுக்குப் பின்னர், 2023 ஆம் ஆண்டில் கொடுப்பனவுகளின் நடப்புக் கணக்கு உபரியாக உள்ளது. வட்டி விகிதம் 10% - 13% வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்று ஜனாதிபதி இன்று (09) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட  உரையில்  சுட்டிக்காட்டினார். தற்போது, ​​நாட்டின் பணவீக்கம் 1.5% வரை வீழ்ச்சியடைந்துள்ளதோடு பல ஆண்டுகளாக பற்றாக்குறையில் இருந்த முதன்மைக் கணக்கின் இருப்பு, 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீத உபரியாக மாற்ற முடிந்தது. 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 300 ரூபாவை விட குறைக்க முடிந்ததோடு, அந்நிய செலாவணி கையிருப்பு 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சவாலான, கடினமான ஆனால் சரியான பாதையில் பயணிப்பதால் இந்த நிலையை அடைய முடிந்ததாகக் குறிப்பிட்டார்2032 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்தக் கடன் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95 வீதமாகக் குறைத்து, அரசாங்கத்தின் மொத்த நிதித் தேவையை வருடாந்தம் 13 வீதமாகக் கொண்டு வருவதும், வெளிநாட்டுக் கடன் சேவையை வருடாந்தம் 4.5 வீத்தைவிட அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதும் கடன் மறுசீரமைப்பின் இறுதி இலக்கு என்று ஜனாதிபதி  குறிப்பிட்டார்இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் மூன்று சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் இதற்கு நிகரான எதிர்வுகூறல்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement