• Dec 03 2024

யாழ்.மருத்துவ பீட இலச்சினையில் தமிழும் நந்தியும் யாழும் தவிர்க்கப்பட்டதா..? அல்லது தவறவிடப்பட்டதா..?

Chithra / May 9th 2024, 3:41 pm
image


தமிழர் பிரதேசங்களில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால தமிழர்களின் கோரிக்கையை ஏற்று 1974ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் 1978 ஆம் ஆண்டு மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு முதல் யாழ் பல்கலைக்கழகம் முழுமையான சுயாதீன பல்கலைக்கழக தகுதியினைப் பெற்று இயங்கி வருகிறது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அந்த இலச்சினையானது தமிழ் மொழி மற்றும் தமிழர் வரலாற்றில் பாண்டித்தியம் பெற்ற பேராசிரியர்களான கைலாசபதி, வித்தியானந்தன் முதலானோரால் ஈழத் தமிழரது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

யாழ் பல்கலைக் கழகச் சின்னத்தின் மத்தியில் உள்ள நந்திச் சின்ன போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிப்பதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளாக யாழ்ப்பாணத்தைத் தனி இராச்சியமாகக் கொண்டு தமிழர் பாரம்பரியத்தையும் கலைகளையும் வளர்த்து வந்த ஆரியச் சக்கரவர்த்திகளின் சின்னமாக இருந்த நந்தியை பிரதிபலிக்கிறது. 

அந்தச் சின்னத்தில் உள்ள குத்துவிளக்கானது அறியாமை என்னும் இருளை அகற்றி அறிவூட்டுவதைக் குறிக்கிறது. மேலும் மகுட வாசகமாகத் தமிழர்களின் தொன்மையான பெருமைக்குரிய அறநூலான திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட 'வெளித்தோற்றத்தை விடுத்து ஆராய்ந்து உண்மையை அறியவேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்தும் "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடமும் மிக அண்மைக்காலம் வரையில் பல்கலைக்கழகத்தின் இந்தத் தனித்துவமான இலச்சினையினையே பயன்படுத்தி வந்தது.

ஆனால் அண்மையில் யாழ் மருத்துவ பீட தமிழ் மொழியினை முற்றாகப் புறந்தள்ளித் தமிழர்களின் பாரம்பரிய சின்னமான நந்தி, யாழ்ப்பாணத்தின் குறியீடான யாழ் வாத்தியம் போன்றவற்றை நீக்கிப் பனையோலையினையும், திராவிடர்களின் கட்டிடக்கலையையும் பிரதிபலிக்காததும், மாணவர்களின் போராட்டத்தினால் கட்டிமுடிக்கப்பட்டதுமான மருத்துவ பீட முகப்புக் கட்டிடத்தின் மத்தியில் உள்வாங்கி ஒரு புதிய இலச்சினையை உருவாக்கியது. 

1978ஆம் ஆண்டு மருத்துவபீடமானது கைதடியில் அமைந்திருந்த பிறிதொரு கட்டிடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது, 1978 என்று பல ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட கட்டிடத்துக்குக் கீழ் குறிப்பிடுவது எவ்வகையிலும் பொருத்தமற்றது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


மேலும், குறித்த புதிய இலச்சினையில் மேலைத்தேய மருத்துவக் குறியீட்டு சின்னமும் (இறக்கைகள் கொண்ட கோல்/நங்கூரத்தினைச் சுற்றியவாறு உள்ள இரண்டு பாம்புகள்) உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


யாழ் மருத்துவ பீடத்தின் இலச்சினை எவ்வாறு இருக்கவேண்டும்? என்பதை வரையறுப்பதற்கு முன்னர், இலங்கையில் உள்ள ஏனைய மருத்துவ பீடங்கள் எவ்வாறு தமது பீட இலச்சினைகளை உருவாக்கியுள்ளனர் என்பதை முதலில் ஆராய்வோம்.


முதலாவதாக முழு இலங்கையையும் பிரதிபலிக்கும் வகையில், 1870 இல் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு மருத்துவ பீட இலைச்சினையை எடுத்துக் கொண்டால் அதில் மத்தியில் மேலைத்தேய மருத்துவத்தை குறிக்கும் பாம்பும் நங்கூரமும் உள்ளது. மேலும் அச்சின்னத்தில் உள்ள தாமரைப் பூவை ஏந்தி செல்லும் அன்னமும் அதனைச் சூழ வர சித்தரிக்கப்பட்டுள்ள தாமரை இதழ்களும் பௌத்தத்தைக் குறிக்கின்றன.


1962 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது மருத்துவ பீடமானது இன்றுவரை பல்கலைக்கழகத்தின் இலச்சினையினையே தமது பீடத்தின் இலச்சினையாக உபயோகித்து வருகிறது. 

இந்த இலச்சினையில், 15 வருடங்களில் இருந்து பிரித்தானியர்கள் ஆக்கிரமிக்கும் வரை நிலைத்திருந்த கண்டி இராச்சியத்தின் சிங்கமும், சமஸ்கிருத மொழி சொற்களும் காணப்படுகின்றன. அதன் வெளிச்சத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள தாமரை இதழ்கள் பௌத்தத்தைக் குறிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு என ஒரு பல்கலைக்கழகம் உருவானபோது, ​​மேற்குறித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இலச்சினையே அதற்குச் சமந்தரமாக யாழ்ப்பாண இராச்சியத்தின் இலச்சினையைத் தமது பல்கலைக்கழகத்தின் இலச்சினையினுள் உள்வாங்கத் தமிழர்களைத் தூண்டியது என்று கருதலாம்.


1979 ஆம் ஆண்டு ருகுணு பல்கலைக்கழகத்தில் இலங்கையின் நான்காவது மருத்துவ பீடத்தின் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட ருகுணு மருத்துவ பீடத்தின் இலச்சினையானது ருகுணு பல்கலைக்கழக இலச்சினையின் பின்னணியில் மேலைத்தேய மருத்துவத்தைக் குறிக்கும் பாம்புகள் உள்ளடக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.


1991 ஆம் ஆண்டு இலங்கையின் ஐந்தாவது மருத்துவ பீடமாக ஆரம்பிக்கப்பட்ட றாகம பீடத்திலும் களனிப் பல்கலைக்கழக இலச்சினையின் பின்னணியில் மேலைத்தேய மருத்துவத்தை குறிக்கும் சின்னம் உள்ளடக்கப்பட்டதே அந்த மருத்துவ பீடத்திற்கான இலச்சினையானது உருவாக்கப்பட்டது. அதிலும் குறிப்பாகத் தமிழ் மொழியில் “மருத்துவ பீடம்-களனிப் பல்கலைக்கழகம்” என்ற வாசகங்கள் அந்த இலச்சினையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


1993 ஆம் ஆண்டு இலங்கையின் ஆறாவது மருத்துவ பீடமாக ஆரம்பிக்கப்பட்ட சிறீஜெயவர்த்தனபுர பீட இலச்சினையிலும் மேலைத்தேய மருத்துவத்தை குறிக்கும் சின்னத்தின் பின்னணியில் பல்கலைக்கழகத்தின் இலச்சினையில் காணப்படும் பௌத்தத்தை குறிக்கும் தாமரை இதழ்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இதைவிட அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ராஜரட்ட, சப்ரகமுவ மற்றும் மொரட்டுவ மருத்துவ பீடங்கள் அனைத்திலும் அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் இலச்சினைகளின் பின்னணியில் மேலைத்தேய மருத்துவத்தின் சின்னம் உள்ளடக்கப்பட்டு அந்தந்த மருத்துவபீட இலச்சினைகள் உள்ளன .


எனவே, இவற்றைப் போலவே யாழ் மருத்துவ பீட இலச்சினையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தனித்துவமான இலச்சினையினைப் பின்னணியாகக் கொண்டு அதன் மேல் மேலைநாட்டு மருத்துவத்தின் குறியீட்டுச் சின்னத்தினை வரைவதன் மூலமாகத் தமிழர் தனித்துவத்தினைப் பறைசாற்றும் வகையில் அமைத்திருக்க முடியும்.

அதை விடுத்து தமக்கே உரிய நந்தியையும் தமது தாய்மொழியான தமிழ் மொழியில் அமைந்த மகுட வாசகத்தினையும் அகற்றி, எந்த வித பண்பாட்டு வரலாற்றுத் தனித்துவங்களும் அற்றதான மருத்துவபீட முகப்புக் கட்டிடத்தை உள்வாங்கி, மேலைநாட்டு மருத்துவத்தின் சின்னத்தை ஈழத் தமிழர்களால் உள்ளடக்கிய ஈழத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட பாரிய வரலாற்றுச் சின்னம் தவறாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர்களாகிய நாமே எமது மரபுவழி அடையாளங்களையும், தாய் மொழியினையும் பாரம்பரிய சின்னங்களையும் நீக்கியும் புறந்தள்ளியும் செயற்படுவோம், எமது எதிர்கால சந்ததியானது பாரம்பரிய மரபுவழி அடையாளங்களை இழந்து நிற்பதற்கு கால்கோளிட்ட துரோகிகளாகவே வரலாற்றுப் பக்கங்களில் பதியப்படுவோம்.

எனவே இவ்வாறான பின்னணியில், புதிதாக உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவபீட இலச்சினையினைப் பாரம்பரிய மரபுவழி அடையாளங்களை உள்வாங்கி மீள்அமைப்பதன் மூலம் இன அழிப்பிற்கு எவ்வகையிலும் குறைவற்ற ஒரு பாரிய வரலாற்றுத் தவறு இழைக்கப்படாது தடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் பணிவான வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

டாக்டர் முரளி வல்லிபுரநாதன்

சமுதாய மருத்துவ நிபுணர்


யாழ்.மருத்துவ பீட இலச்சினையில் தமிழும் நந்தியும் யாழும் தவிர்க்கப்பட்டதா. அல்லது தவறவிடப்பட்டதா. தமிழர் பிரதேசங்களில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால தமிழர்களின் கோரிக்கையை ஏற்று 1974ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் 1978 ஆம் ஆண்டு மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு முதல் யாழ் பல்கலைக்கழகம் முழுமையான சுயாதீன பல்கலைக்கழக தகுதியினைப் பெற்று இயங்கி வருகிறது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அந்த இலச்சினையானது தமிழ் மொழி மற்றும் தமிழர் வரலாற்றில் பாண்டித்தியம் பெற்ற பேராசிரியர்களான கைலாசபதி, வித்தியானந்தன் முதலானோரால் ஈழத் தமிழரது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.யாழ் பல்கலைக் கழகச் சின்னத்தின் மத்தியில் உள்ள நந்திச் சின்ன போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிப்பதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளாக யாழ்ப்பாணத்தைத் தனி இராச்சியமாகக் கொண்டு தமிழர் பாரம்பரியத்தையும் கலைகளையும் வளர்த்து வந்த ஆரியச் சக்கரவர்த்திகளின் சின்னமாக இருந்த நந்தியை பிரதிபலிக்கிறது. அந்தச் சின்னத்தில் உள்ள குத்துவிளக்கானது அறியாமை என்னும் இருளை அகற்றி அறிவூட்டுவதைக் குறிக்கிறது. மேலும் மகுட வாசகமாகத் தமிழர்களின் தொன்மையான பெருமைக்குரிய அறநூலான திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட 'வெளித்தோற்றத்தை விடுத்து ஆராய்ந்து உண்மையை அறியவேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்தும் "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடமும் மிக அண்மைக்காலம் வரையில் பல்கலைக்கழகத்தின் இந்தத் தனித்துவமான இலச்சினையினையே பயன்படுத்தி வந்தது.ஆனால் அண்மையில் யாழ் மருத்துவ பீட தமிழ் மொழியினை முற்றாகப் புறந்தள்ளித் தமிழர்களின் பாரம்பரிய சின்னமான நந்தி, யாழ்ப்பாணத்தின் குறியீடான யாழ் வாத்தியம் போன்றவற்றை நீக்கிப் பனையோலையினையும், திராவிடர்களின் கட்டிடக்கலையையும் பிரதிபலிக்காததும், மாணவர்களின் போராட்டத்தினால் கட்டிமுடிக்கப்பட்டதுமான மருத்துவ பீட முகப்புக் கட்டிடத்தின் மத்தியில் உள்வாங்கி ஒரு புதிய இலச்சினையை உருவாக்கியது. 1978ஆம் ஆண்டு மருத்துவபீடமானது கைதடியில் அமைந்திருந்த பிறிதொரு கட்டிடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது, 1978 என்று பல ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட கட்டிடத்துக்குக் கீழ் குறிப்பிடுவது எவ்வகையிலும் பொருத்தமற்றது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.மேலும், குறித்த புதிய இலச்சினையில் மேலைத்தேய மருத்துவக் குறியீட்டு சின்னமும் (இறக்கைகள் கொண்ட கோல்/நங்கூரத்தினைச் சுற்றியவாறு உள்ள இரண்டு பாம்புகள்) உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.யாழ் மருத்துவ பீடத்தின் இலச்சினை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை வரையறுப்பதற்கு முன்னர், இலங்கையில் உள்ள ஏனைய மருத்துவ பீடங்கள் எவ்வாறு தமது பீட இலச்சினைகளை உருவாக்கியுள்ளனர் என்பதை முதலில் ஆராய்வோம்.முதலாவதாக முழு இலங்கையையும் பிரதிபலிக்கும் வகையில், 1870 இல் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு மருத்துவ பீட இலைச்சினையை எடுத்துக் கொண்டால் அதில் மத்தியில் மேலைத்தேய மருத்துவத்தை குறிக்கும் பாம்பும் நங்கூரமும் உள்ளது. மேலும் அச்சின்னத்தில் உள்ள தாமரைப் பூவை ஏந்தி செல்லும் அன்னமும் அதனைச் சூழ வர சித்தரிக்கப்பட்டுள்ள தாமரை இதழ்களும் பௌத்தத்தைக் குறிக்கின்றன.1962 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது மருத்துவ பீடமானது இன்றுவரை பல்கலைக்கழகத்தின் இலச்சினையினையே தமது பீடத்தின் இலச்சினையாக உபயோகித்து வருகிறது. இந்த இலச்சினையில், 15 வருடங்களில் இருந்து பிரித்தானியர்கள் ஆக்கிரமிக்கும் வரை நிலைத்திருந்த கண்டி இராச்சியத்தின் சிங்கமும், சமஸ்கிருத மொழி சொற்களும் காணப்படுகின்றன. அதன் வெளிச்சத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள தாமரை இதழ்கள் பௌத்தத்தைக் குறிக்கின்றன.யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு என ஒரு பல்கலைக்கழகம் உருவானபோது, ​​மேற்குறித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இலச்சினையே அதற்குச் சமந்தரமாக யாழ்ப்பாண இராச்சியத்தின் இலச்சினையைத் தமது பல்கலைக்கழகத்தின் இலச்சினையினுள் உள்வாங்கத் தமிழர்களைத் தூண்டியது என்று கருதலாம்.1979 ஆம் ஆண்டு ருகுணு பல்கலைக்கழகத்தில் இலங்கையின் நான்காவது மருத்துவ பீடத்தின் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட ருகுணு மருத்துவ பீடத்தின் இலச்சினையானது ருகுணு பல்கலைக்கழக இலச்சினையின் பின்னணியில் மேலைத்தேய மருத்துவத்தைக் குறிக்கும் பாம்புகள் உள்ளடக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.1991 ஆம் ஆண்டு இலங்கையின் ஐந்தாவது மருத்துவ பீடமாக ஆரம்பிக்கப்பட்ட றாகம பீடத்திலும் களனிப் பல்கலைக்கழக இலச்சினையின் பின்னணியில் மேலைத்தேய மருத்துவத்தை குறிக்கும் சின்னம் உள்ளடக்கப்பட்டதே அந்த மருத்துவ பீடத்திற்கான இலச்சினையானது உருவாக்கப்பட்டது. அதிலும் குறிப்பாகத் தமிழ் மொழியில் “மருத்துவ பீடம்-களனிப் பல்கலைக்கழகம்” என்ற வாசகங்கள் அந்த இலச்சினையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.1993 ஆம் ஆண்டு இலங்கையின் ஆறாவது மருத்துவ பீடமாக ஆரம்பிக்கப்பட்ட சிறீஜெயவர்த்தனபுர பீட இலச்சினையிலும் மேலைத்தேய மருத்துவத்தை குறிக்கும் சின்னத்தின் பின்னணியில் பல்கலைக்கழகத்தின் இலச்சினையில் காணப்படும் பௌத்தத்தை குறிக்கும் தாமரை இதழ்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.இதைவிட அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ராஜரட்ட, சப்ரகமுவ மற்றும் மொரட்டுவ மருத்துவ பீடங்கள் அனைத்திலும் அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் இலச்சினைகளின் பின்னணியில் மேலைத்தேய மருத்துவத்தின் சின்னம் உள்ளடக்கப்பட்டு அந்தந்த மருத்துவபீட இலச்சினைகள் உள்ளன .எனவே, இவற்றைப் போலவே யாழ் மருத்துவ பீட இலச்சினையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தனித்துவமான இலச்சினையினைப் பின்னணியாகக் கொண்டு அதன் மேல் மேலைநாட்டு மருத்துவத்தின் குறியீட்டுச் சின்னத்தினை வரைவதன் மூலமாகத் தமிழர் தனித்துவத்தினைப் பறைசாற்றும் வகையில் அமைத்திருக்க முடியும்.அதை விடுத்து தமக்கே உரிய நந்தியையும் தமது தாய்மொழியான தமிழ் மொழியில் அமைந்த மகுட வாசகத்தினையும் அகற்றி, எந்த வித பண்பாட்டு வரலாற்றுத் தனித்துவங்களும் அற்றதான மருத்துவபீட முகப்புக் கட்டிடத்தை உள்வாங்கி, மேலைநாட்டு மருத்துவத்தின் சின்னத்தை ஈழத் தமிழர்களால் உள்ளடக்கிய ஈழத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட பாரிய வரலாற்றுச் சின்னம் தவறாக உருவாக்கப்பட்டுள்ளது.தமிழர்களாகிய நாமே எமது மரபுவழி அடையாளங்களையும், தாய் மொழியினையும் பாரம்பரிய சின்னங்களையும் நீக்கியும் புறந்தள்ளியும் செயற்படுவோம், எமது எதிர்கால சந்ததியானது பாரம்பரிய மரபுவழி அடையாளங்களை இழந்து நிற்பதற்கு கால்கோளிட்ட துரோகிகளாகவே வரலாற்றுப் பக்கங்களில் பதியப்படுவோம்.எனவே இவ்வாறான பின்னணியில், புதிதாக உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவபீட இலச்சினையினைப் பாரம்பரிய மரபுவழி அடையாளங்களை உள்வாங்கி மீள்அமைப்பதன் மூலம் இன அழிப்பிற்கு எவ்வகையிலும் குறைவற்ற ஒரு பாரிய வரலாற்றுத் தவறு இழைக்கப்படாது தடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் பணிவான வேண்டுகோளை முன்வைக்கிறேன்.டாக்டர் முரளி வல்லிபுரநாதன்சமுதாய மருத்துவ நிபுணர்

Advertisement

Advertisement

Advertisement