• Sep 20 2024

சர்வதேச மனித உரிமைகள் தினம்: மட்டக்களப்பிலும் உறவுகளின் பேரணி!

Tamil nila / Dec 10th 2022, 4:51 pm
image

Advertisement

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மட்டக்களப்பில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

மட்டக்களப்பு - கல்லடிப் பாலத்துக்கு அருகில் இருந்து ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நிறைவு பெற்றது. இதில், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்துகொண்டனர்.


இந்தப் பேரணியில் கலந்துகொண்டோர் அரசுக்கு எதிராகப் பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும ஏந்தியிருந்தனர்.


பேரணின் இறுதியில் மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் கோஷங்களை எழுப்பியவாறு ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு - திருகோணமலை இணைப்பாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினம்: மட்டக்களப்பிலும் உறவுகளின் பேரணி சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மட்டக்களப்பில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.மட்டக்களப்பு - கல்லடிப் பாலத்துக்கு அருகில் இருந்து ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நிறைவு பெற்றது. இதில், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்துகொண்டனர்.இந்தப் பேரணியில் கலந்துகொண்டோர் அரசுக்கு எதிராகப் பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும ஏந்தியிருந்தனர்.பேரணின் இறுதியில் மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் கோஷங்களை எழுப்பியவாறு ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு - திருகோணமலை இணைப்பாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement