• Apr 26 2026

மட்டக்களப்பு வாகரை காரமுனையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

shanu / Mar 9th 2026, 10:23 am
image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, வாகரை காரமுனைப் பகுதியில் மகளிர் தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை  (08.03.2026)  நடைபெற்றது.


சமூக செயற்பாட்டாளர் திருமதி ரஜனி ஜெயப்பிரகாஷ்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக மேம்பாடு குறித்த பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி சுஜாராஜினி வரதராஜன், ஓய்வுநிலை ஆசிரியர் மற்றும் வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர்

திருமதி சரஸ்வதி விஜயநாதன், பாடுமீன் சுவஹாஸ் பூ வளர்ப்போர் சங்க ஆலோசகர்

திருமதி பிரபா செல்வராசா, கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது பெண்களின் சமூகப் பங்களிப்புகள் கௌரவிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.


மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேச பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வும் இதன்போது ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு வாகரை காரமுனையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, வாகரை காரமுனைப் பகுதியில் மகளிர் தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை  (08.03.2026)  நடைபெற்றது.சமூக செயற்பாட்டாளர் திருமதி ரஜனி ஜெயப்பிரகாஷ்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக மேம்பாடு குறித்த பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி சுஜாராஜினி வரதராஜன், ஓய்வுநிலை ஆசிரியர் மற்றும் வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர்திருமதி சரஸ்வதி விஜயநாதன், பாடுமீன் சுவஹாஸ் பூ வளர்ப்போர் சங்க ஆலோசகர்திருமதி பிரபா செல்வராசா, கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.இதன்போது பெண்களின் சமூகப் பங்களிப்புகள் கௌரவிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேச பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வும் இதன்போது ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement