• Apr 04 2025

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் குறித்து விசாரணை

Chithra / Apr 3rd 2025, 7:46 am
image


பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் குறித்து விசாரணை நடாத்தவுள்ளோம்.

அத்தோடு,துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத நபர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா அல்லது அவர்கள் நாட்டில் வசிக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். 

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் குறித்து விசாரணை பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் குறித்து விசாரணை நடாத்தவுள்ளோம்.அத்தோடு,துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத நபர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா அல்லது அவர்கள் நாட்டில் வசிக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement