• May 21 2026

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் களுவாஞ்சிகுடியில் விசாரணைகள்

Chithra / May 20th 2026, 1:07 pm
image

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.


இதன்போது விசாரணைகளுக்காக மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென் மேற்கு, மற்றும் மண்முனைப் பற்று ஆகிய பிரதேசங்களிலிருந்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் 40 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன.


காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, குழுத் தலைவர் விமலநாதன், பிராந்திய இணைப்பாளர் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.


களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்று  காலையிலிருந்து முன்னெடுத்துள்ள இந்த விசாரணைகள்  இன்று மாலை 4 மணிவரை நடை பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் களுவாஞ்சிகுடியில் விசாரணைகள் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.இதன்போது விசாரணைகளுக்காக மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென் மேற்கு, மற்றும் மண்முனைப் பற்று ஆகிய பிரதேசங்களிலிருந்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் 40 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன.காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, குழுத் தலைவர் விமலநாதன், பிராந்திய இணைப்பாளர் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்று  காலையிலிருந்து முன்னெடுத்துள்ள இந்த விசாரணைகள்  இன்று மாலை 4 மணிவரை நடை பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement