• May 02 2024

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்...!

Chithra / Dec 10th 2023, 9:23 am
image

Advertisement

 

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் விரிவான உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஆறு மணித்தியாலங்கள் திடீரென மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை(09) மாலை 5.10 மணியளவில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபட்டதுடன், நாடளாவிய ரீதியில்  பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.

இந்த திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் துல்லியமாக வெளிப்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக நேற்று மாலை நீர் விநியோகமும் தடைப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சில மணித்தியாலங்களில் நீர் விநியோகம் சீரமைக்கப்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது.



 

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்.  நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் விரிவான உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.ஆறு மணித்தியாலங்கள் திடீரென மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.நேற்று சனிக்கிழமை(09) மாலை 5.10 மணியளவில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபட்டதுடன், நாடளாவிய ரீதியில்  பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.இந்த திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் துல்லியமாக வெளிப்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக நேற்று மாலை நீர் விநியோகமும் தடைப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், சில மணித்தியாலங்களில் நீர் விநியோகம் சீரமைக்கப்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement