• Nov 15 2024

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட - 12 இந்தியா மீனவர்கள் கடற்படையினரால் கைது!

Tharmini / Nov 12th 2024, 1:05 pm
image

எல்லை தாண்டிய  மீன்பிடியில்ஈடுபட்ட 12 இந்தியா மீனவர்கள் இன்று (12) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடப்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் மயிலிட்டி கடற்கரை முகாமில் தடுத்துவைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும், 

விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல்  வளத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைத்து, பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நீதியல் வளத்துறை மற்றும் கடல் தொழில் திணைக்கள்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கைது செய்யப்பட்ட 12 இந்திய  மீனவர்களையும் விடுவிக்ககோரி இந்தியாவின் பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு இந்திய மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை காலையிலிருந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்படும்வரை தமது போராட்டம் தொடரும் என்றும் இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளனர்.




அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட - 12 இந்தியா மீனவர்கள் கடற்படையினரால் கைது எல்லை தாண்டிய  மீன்பிடியில்ஈடுபட்ட 12 இந்தியா மீனவர்கள் இன்று (12) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடப்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் மயிலிட்டி கடற்கரை முகாமில் தடுத்துவைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல்  வளத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைத்து, பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நீதியல் வளத்துறை மற்றும் கடல் தொழில் திணைக்கள்  தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை கைது செய்யப்பட்ட 12 இந்திய  மீனவர்களையும் விடுவிக்ககோரி இந்தியாவின் பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு இந்திய மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை காலையிலிருந்து முன்னெடுத்து வருகின்றனர்.இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்படும்வரை தமது போராட்டம் தொடரும் என்றும் இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement