இஸ்ரேலிய நிலப்பரப்பை இலக்கு வைத்து ஈரான் கடந்த ஒரு மணித்தியாலத்திற்குள் 'புதிய அலை' ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், ஈரானின் இந்தத் தாக்குதல்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது
ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்து அழித்தபோது சிதறிய ஏவுகணைத் துண்டுகள் இஸ்ரேலின் குறைந்தது மூன்று இடங்களில் வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு கட்டார் அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஏவுகணைத் தாக்குதல் அபாயம் குறித்து எச்சரித்துள்ள கட்டார் உள்துறை அமைச்சு, பொதுமக்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரும் வரை பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கத் தூதரக ஊழியர்கள் வெளியேற்றம் மற்றும் இவ்வாறான ஏவுகணைத் தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இஸ்ரேல் மீதான ஈரான் ஏவுகணைத் தாக்குதல் இடைமறிப்பு இஸ்ரேலிய நிலப்பரப்பை இலக்கு வைத்து ஈரான் கடந்த ஒரு மணித்தியாலத்திற்குள் 'புதிய அலை' ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.எனினும், ஈரானின் இந்தத் தாக்குதல்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளதுஈரானிய ஏவுகணைகளை இடைமறித்து அழித்தபோது சிதறிய ஏவுகணைத் துண்டுகள் இஸ்ரேலின் குறைந்தது மூன்று இடங்களில் வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு கட்டார் அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.ஏவுகணைத் தாக்குதல் அபாயம் குறித்து எச்சரித்துள்ள கட்டார் உள்துறை அமைச்சு, பொதுமக்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரும் வரை பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கத் தூதரக ஊழியர்கள் வெளியேற்றம் மற்றும் இவ்வாறான ஏவுகணைத் தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.