• Jul 13 2026

அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் பதிலடித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மீண்டும் தீப்பொறி

Chithra / Jul 13th 2026, 10:38 am
image


ஈரானின் தெற்கு நகரங்களான ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய 3 முக்கிய நகரங்களில் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 


இதுபற்றி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு பிரிவான ராணுவ அதிரடி படையான சென்ட்காம் வெளியிட்ட செய்தியில், ஹேர்முஸ் நீரிணையை எளிதில் கடந்து செல்லும் வகையில், வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து பாதுகாப்பிற்காகவும் மற்றும் கடல்சார் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் ஈரானுக்கு எதிராக அதிகளவிலான தாக்குதல்களை அமெரிக்க படை தொடங்கியுள்ளது. 


ஈரானிய படைகளின் திறனை குறைக்கும் வகையில், பாதுகாப்பு படை தளபதியின் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது. 


இதன்படி, ஈரானின் தெற்கு நகரங்களான ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய 3 முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கான சத்தம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 

இதேவேளை அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் ஜோர்தான் தளத்தில் உள்ள எரிபொருள் சேமிப்புத் தாங்கிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது தமது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. 


ஜோர்தானின் இளவரசர் ஹசன் விமானப் படையணித் தளத்தை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கியுள்ளதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதில் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. 


பழிவாங்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக பஹ்ரைனின் ஷேக் ஈசாவில் உள்ள அமெரிக்கத் தளத்தைத் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. 


எவ்வாறாயினும் இது அமெரிக்காவின் கடற்படைத் தலைமையகம் இல்லையென்ற போதிலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கும் விமானங்களுக்கும் குறித்த தளம் வசதிகளை வழங்கி வருகின்றது. 


பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்கைத் தாக்கியுள்ளதாக ஈரான் கூறுகின்ற நிலையிலும், வளைகுடா நாடான அங்கு அவசரகால எச்சரிக்கை ஒலிகள் ஒலிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


இதேவளை குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.


இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்களால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் வேகமாக அதிகரித்துள்ளது.


தற்போது, ​​ஒரு பீப்பாய் பிரென்ட் ரக மசகு எண்ணெயின் விலை 79 அமெரிக்க டொலருக்கும் அதிகமாகவும், ஒரு பீப்பாய் WTI ரக எண்ணெயின் விலை 74 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.


அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் பதிலடித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மீண்டும் தீப்பொறி ஈரானின் தெற்கு நகரங்களான ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய 3 முக்கிய நகரங்களில் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுபற்றி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு பிரிவான ராணுவ அதிரடி படையான சென்ட்காம் வெளியிட்ட செய்தியில், ஹேர்முஸ் நீரிணையை எளிதில் கடந்து செல்லும் வகையில், வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து பாதுகாப்பிற்காகவும் மற்றும் கடல்சார் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் ஈரானுக்கு எதிராக அதிகளவிலான தாக்குதல்களை அமெரிக்க படை தொடங்கியுள்ளது. ஈரானிய படைகளின் திறனை குறைக்கும் வகையில், பாதுகாப்பு படை தளபதியின் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதன்படி, ஈரானின் தெற்கு நகரங்களான ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய 3 முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கான சத்தம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதேவேளை அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் ஜோர்தான் தளத்தில் உள்ள எரிபொருள் சேமிப்புத் தாங்கிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது தமது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. ஜோர்தானின் இளவரசர் ஹசன் விமானப் படையணித் தளத்தை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கியுள்ளதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதில் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. பழிவாங்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக பஹ்ரைனின் ஷேக் ஈசாவில் உள்ள அமெரிக்கத் தளத்தைத் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இது அமெரிக்காவின் கடற்படைத் தலைமையகம் இல்லையென்ற போதிலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கும் விமானங்களுக்கும் குறித்த தளம் வசதிகளை வழங்கி வருகின்றது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்கைத் தாக்கியுள்ளதாக ஈரான் கூறுகின்ற நிலையிலும், வளைகுடா நாடான அங்கு அவசரகால எச்சரிக்கை ஒலிகள் ஒலிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவளை குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்களால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் வேகமாக அதிகரித்துள்ளது.தற்போது, ​​ஒரு பீப்பாய் பிரென்ட் ரக மசகு எண்ணெயின் விலை 79 அமெரிக்க டொலருக்கும் அதிகமாகவும், ஒரு பீப்பாய் WTI ரக எண்ணெயின் விலை 74 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement