• Jul 21 2025

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் அணுசக்தி நிலையங்கள் கடுமையான சேதம்!

shanuja / Jun 27th 2025, 9:04 pm
image

இஸ்ரேலின் தாக்குதலால்  ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், 

சமீபத்திய அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி தளங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.  சேதங்கள் குறித்த மதிப்பீட்டை ஈரானின் அணுசக்தி அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. 

 

எவ்வாறாயினும், ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தாக்குதல்கள் நாட்டின் அணுசக்தி திட்டத்தை சீர்குலைக்கவில்லை  என்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது என்றார். 


தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கும் மேலாக இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் உயிரிழந்தனர். இருதரப்பு தாக்குதலும் அதிகரித்து வர மத்திய கிழக்கு நாட்டில் பதற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் அணுசக்தி நிலையங்கள் கடுமையான சேதம் இஸ்ரேலின் தாக்குதலால்  ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், சமீபத்திய அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி தளங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.  சேதங்கள் குறித்த மதிப்பீட்டை ஈரானின் அணுசக்தி அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.  எவ்வாறாயினும், ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தாக்குதல்கள் நாட்டின் அணுசக்தி திட்டத்தை சீர்குலைக்கவில்லை  என்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது என்றார். தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கும் மேலாக இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் உயிரிழந்தனர். இருதரப்பு தாக்குதலும் அதிகரித்து வர மத்திய கிழக்கு நாட்டில் பதற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now