ஈரான் அதி உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்துள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தனர்.
அத்துடன் உயிரிழந்த அலி கமேனியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது.
எனினும் அதனை ஈரான் பாதுகாப்பு மற்றும் வௌிவிவகார அமைச்சு மறுத்திருந்தது.
இந்நிலையில், அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தமையை தற்போது ஈரான் அரச ஊடகம் உறுதிப்படுத்தி செய்தி வௌியிட்டுள்ளது.
முன்னதாக அவரது மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் அதி உச்சத் தலைவர் கொல்லப்பட்டமை உறுதி; மகள், மருமகன், பேரப்பிள்ளையும் பலி ஈரான் அதி உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்துள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தனர். அத்துடன் உயிரிழந்த அலி கமேனியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது. எனினும் அதனை ஈரான் பாதுகாப்பு மற்றும் வௌிவிவகார அமைச்சு மறுத்திருந்தது. இந்நிலையில், அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தமையை தற்போது ஈரான் அரச ஊடகம் உறுதிப்படுத்தி செய்தி வௌியிட்டுள்ளது. முன்னதாக அவரது மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.