• Jan 07 2025

அரச ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க அநுர அரசு திட்டமா? எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Chithra / Dec 31st 2024, 8:26 am
image

 

அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 36 வீதத்தினால் குறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம்சுமத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச ஊழியர்களின் எண்ணிக்கையை ஐந்தரை இலட்சத்தினால் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

அரச ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க அநுர அரசு திட்டமா எதிர்க்கட்சி குற்றச்சாட்டு  அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 36 வீதத்தினால் குறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம்சுமத்தியுள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அரச ஊழியர்களின் எண்ணிக்கையை ஐந்தரை இலட்சத்தினால் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement