ஏப்ரல் 15 ஆம் திகதியை அரச விடுமுறை நாளாக அறிவிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேயரத்ன தெரிவித்தார்.
இன்று (10) பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.
வெள்ளிக்கிழமை புனித வெள்ளி நாளாக இருப்பதால், அந்த வாரத்தில் வேலை செய்ய மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால், அந்த நாள் குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
ஏப்ரல் 15ம் திகதி அரச விடுமுறையா வெளியான அறிவிப்பு ஏப்ரல் 15 ஆம் திகதியை அரச விடுமுறை நாளாக அறிவிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேயரத்ன தெரிவித்தார்.இன்று (10) பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.வெள்ளிக்கிழமை புனித வெள்ளி நாளாக இருப்பதால், அந்த வாரத்தில் வேலை செய்ய மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால், அந்த நாள் குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.