• Apr 13 2025

யாழில் 35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வீதி; பொங்கல் பொங்கி கொண்டாடிய மக்கள்

Chithra / Apr 10th 2025, 10:50 am
image


இராணுவப் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த யாழ்ப்பாணம் வசாவிளான் - பலாலி வீதி இன்று காலைமுதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

இந்நிலையில் நீண்டகால மூடப்பட்டிருந்த வீதி விடுவிப்பினை மக்கள் பொங்கல் வைத்து தேங்காய் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை- பொன்னாலை வீதியுடன் இணையும் பலாலி சந்தி  வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதியே இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளது.  

35 வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த வசாவிளான் தொடக்கம் பலாலி கடற்கரை சந்தி வரையிலான பாதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளதுடன் வீதியை பயன்படுத்துவது தொடர்பாக சில கட்டுப்பாட்டு விதிமுறைகள் இராணுவத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

அதன்படி, சில பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த வீதியினூடாக நடந்தும், மிதிவண்டியினூடாகவும் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனங்களினூடான போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக மூடப்பட்டு இருந்த குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த அதேவேளை, கடந்த ஜனவரி 31ம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ் மாட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இக்கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டிருந்தது. 

குறித்த வீதி விடுவிப்பினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும்,  இது ஒரு தேர்தலுக்கான நடவடிக்கையாக இல்லாமல் தொடர்ச்சியான மக்கள் பாவனைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

நீண்டகால மூடப்பட்டிருந்த வீதி விடுவிப்பினை மக்கள் பொங்கல் வைத்து தேங்காய் அடித்து கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


யாழில் 35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வீதி; பொங்கல் பொங்கி கொண்டாடிய மக்கள் இராணுவப் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த யாழ்ப்பாணம் வசாவிளான் - பலாலி வீதி இன்று காலைமுதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் நீண்டகால மூடப்பட்டிருந்த வீதி விடுவிப்பினை மக்கள் பொங்கல் வைத்து தேங்காய் அடித்து கொண்டாடி வருகின்றனர்.யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை- பொன்னாலை வீதியுடன் இணையும் பலாலி சந்தி  வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதியே இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளது.  35 வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த வசாவிளான் தொடக்கம் பலாலி கடற்கரை சந்தி வரையிலான பாதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளதுடன் வீதியை பயன்படுத்துவது தொடர்பாக சில கட்டுப்பாட்டு விதிமுறைகள் இராணுவத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சில பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த வீதியினூடாக நடந்தும், மிதிவண்டியினூடாகவும் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனங்களினூடான போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நீண்டகாலமாக மூடப்பட்டு இருந்த குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த அதேவேளை, கடந்த ஜனவரி 31ம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ் மாட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இக்கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த வீதி விடுவிப்பினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும்,  இது ஒரு தேர்தலுக்கான நடவடிக்கையாக இல்லாமல் தொடர்ச்சியான மக்கள் பாவனைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். நீண்டகால மூடப்பட்டிருந்த வீதி விடுவிப்பினை மக்கள் பொங்கல் வைத்து தேங்காய் அடித்து கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement