• Jun 16 2026

“எங்கள் வியர்வைக்கு விலையில்லையா?” – கந்தளாய் விவசாயிகள் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

Chithra / Jun 16th 2026, 10:24 am
image


பொருட்களின் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கும், உற்பத்தி செய்யப்படும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, கந்தளாய் பிரதேச விவசாயிகள் இன்று (16) மாபெரும்  போராட்டத்தை முன்னெடுத்தனர்.


கந்தளாய் விவசாயிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். 


கந்தளாய் பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணித்து கந்தளாய் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.


'விவசாயிகளின் நெல்லுக்கு உடனடி மற்றும் நியாயமான உத்தரவாத விலையை வழங்க வேண்டும், அதிகரித்து வரும் விவசாய இடுபொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் நிலையான தீர்வை முன்வைக்க வேண்டும்' போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். 


போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், "எங்கள் வியர்வைக்கு விலையில்லையா?", "விவசாயிகளை நடுத்தெருவில் விடாதே" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை  ஏந்தியவாறு அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


பேரணியின் இறுதியில், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை விவசாயிகள் கந்தளாய் பிரதேச செயலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 


தமக்கான உரிய தீர்வு எட்டப்படாவிடின், போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் விவசாயிகள் இதன்போது எச்சரிக்கை விடுத்தனர்.


“எங்கள் வியர்வைக்கு விலையில்லையா” – கந்தளாய் விவசாயிகள் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் பொருட்களின் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கும், உற்பத்தி செய்யப்படும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, கந்தளாய் பிரதேச விவசாயிகள் இன்று (16) மாபெரும்  போராட்டத்தை முன்னெடுத்தனர்.கந்தளாய் விவசாயிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். கந்தளாய் பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணித்து கந்தளாய் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.'விவசாயிகளின் நெல்லுக்கு உடனடி மற்றும் நியாயமான உத்தரவாத விலையை வழங்க வேண்டும், அதிகரித்து வரும் விவசாய இடுபொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் நிலையான தீர்வை முன்வைக்க வேண்டும்' போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், "எங்கள் வியர்வைக்கு விலையில்லையா", "விவசாயிகளை நடுத்தெருவில் விடாதே" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை  ஏந்தியவாறு அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.பேரணியின் இறுதியில், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை விவசாயிகள் கந்தளாய் பிரதேச செயலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தமக்கான உரிய தீர்வு எட்டப்படாவிடின், போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் விவசாயிகள் இதன்போது எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement