• Sep 23 2024

இலங்கையை வந்தடைந்த சீன கப்பல்-இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? samugammedia

Tamil nila / Oct 25th 2023, 7:47 pm
image

Advertisement

சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பல் "ஷி யான் 6" இன்று (25) கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

கப்பல் வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சீன கடல் ஆய்வுக் கப்பல் வருகை குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்ததுடன், இதன் காரணமாக சர்ச்சைக்குரிய சூழல் உருவானது.

எனினும், பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் கப்பலின் வருகைக்கு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தன.

"ஷி யான் 6" என்பது புவி இயற்பியல் ஆய்வுக்காக நில அதிர்வுத் தகவல்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்ட ஒரு நவீன அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலாகும்.

நாரா நிறுவனத்துடன் இணைந்து இந்த கப்பல் ஆய்வு நடத்தவுள்ளது.

இதன்படி, "ஷி யான் 6" என்ற கப்பல் சுமார் 25 நாட்கள் இந்த நாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.




இலங்கையை வந்தடைந்த சீன கப்பல்-இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா samugammedia சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பல் "ஷி யான் 6" இன்று (25) கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.கப்பல் வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சீன கடல் ஆய்வுக் கப்பல் வருகை குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்ததுடன், இதன் காரணமாக சர்ச்சைக்குரிய சூழல் உருவானது.எனினும், பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் கப்பலின் வருகைக்கு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தன."ஷி யான் 6" என்பது புவி இயற்பியல் ஆய்வுக்காக நில அதிர்வுத் தகவல்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்ட ஒரு நவீன அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலாகும்.நாரா நிறுவனத்துடன் இணைந்து இந்த கப்பல் ஆய்வு நடத்தவுள்ளது.இதன்படி, "ஷி யான் 6" என்ற கப்பல் சுமார் 25 நாட்கள் இந்த நாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement