• May 13 2025

நாட்டில் மீண்டும் உப்புக்கு தட்டுப்பாடு?

Chithra / May 13th 2025, 7:56 am
image


உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.

இதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாட்டை காணக்கூடியதாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத் தொகை கிடைத்த பின்னர் உப்பு தட்டுப்பாடு கட்டுப்படுத்தப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், சந்தையில் உப்பு விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

1 கிலோகிராம் உப்பை 450 முதல் 500 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்ய வர்த்தகர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


நாட்டில் மீண்டும் உப்புக்கு தட்டுப்பாடு உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.இதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாட்டை காணக்கூடியதாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத் தொகை கிடைத்த பின்னர் உப்பு தட்டுப்பாடு கட்டுப்படுத்தப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.இதற்கிடையில், சந்தையில் உப்பு விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.1 கிலோகிராம் உப்பை 450 முதல் 500 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்ய வர்த்தகர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement