• Nov 24 2024

நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு?

Chithra / Feb 16th 2024, 9:37 am
image



இந்த நாட்டில் வருடாந்த தேங்காய் எண்ணெய் தேவை 24,0000 மெற்றிக் தொன் எனவும், அந்த தேவையை பூர்த்தி செய்ய உள்ளுர் உற்பத்தி போதுமானதாக இல்லை எனவும் மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள நடுத்தர மற்றும் சிறிய அளவிலான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிட்டு பற்றாக்குறையை மட்டும் இறக்குமதி செய்து சமநிலையைப் பேணாவிட்டால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் வீழ்ச்சியடையும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தற்போது, ​​நாட்டின் வருடாந்த தேங்காய் உற்பத்தி 2,800 முதல் 3,200 மில்லியன்கள்,

அதில் 70% உள்நாட்டு நுகர்வுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

ஒரு தேங்காய் 70 ரூபாவிற்கு விவசாயியிடம் இருந்து கொள்வனவு செய்து எண்ணெயை தயாரித்தால் ஒரு போத்தல் 600 ரூபாவாகும்.

 தற்போது சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் 400 தொடக்கம் 450 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு இந்த நாட்டில் வருடாந்த தேங்காய் எண்ணெய் தேவை 24,0000 மெற்றிக் தொன் எனவும், அந்த தேவையை பூர்த்தி செய்ய உள்ளுர் உற்பத்தி போதுமானதாக இல்லை எனவும் மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள நடுத்தர மற்றும் சிறிய அளவிலான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிட்டு பற்றாக்குறையை மட்டும் இறக்குமதி செய்து சமநிலையைப் பேணாவிட்டால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் வீழ்ச்சியடையும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.தற்போது, ​​நாட்டின் வருடாந்த தேங்காய் உற்பத்தி 2,800 முதல் 3,200 மில்லியன்கள்,அதில் 70% உள்நாட்டு நுகர்வுக்காக பயன்படுத்தப்படுகின்றது.ஒரு தேங்காய் 70 ரூபாவிற்கு விவசாயியிடம் இருந்து கொள்வனவு செய்து எண்ணெயை தயாரித்தால் ஒரு போத்தல் 600 ரூபாவாகும். தற்போது சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் 400 தொடக்கம் 450 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement