• Apr 16 2026

எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடா?

Chithra / Feb 5th 2026, 12:55 pm
image

 

இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 41 சிகிச்சை மையங்கள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இன்று (05) பதில் வழங்கும் போதே, அமைச்சர் இந்த தகவலை வௌியிட்டார். 


அத்துடன், அவற்றில் 4,771 எச்.ஐ.வி எயிட்ஸ் நோயாளர்களும், 1,469 சிபிலிஸ் நோயாளர்களும் மற்றும் 2,891 ஹெர்பீஸ் நோயாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் கூறினார். 


இதனிடையே, எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் மருந்துகளில் தற்போது 36,421 மாத்திரைகள் கையிருப்பில் இருப்பதாகவும், அது நான்கு மாதங்களுக்குப் போதுமானது என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார். 


எனவே அந்த நோய்களுக்கான மருந்துகளில் எவ்வித தட்டுப்பாடுகளும் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடா  இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 41 சிகிச்சை மையங்கள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இன்று (05) பதில் வழங்கும் போதே, அமைச்சர் இந்த தகவலை வௌியிட்டார். அத்துடன், அவற்றில் 4,771 எச்.ஐ.வி எயிட்ஸ் நோயாளர்களும், 1,469 சிபிலிஸ் நோயாளர்களும் மற்றும் 2,891 ஹெர்பீஸ் நோயாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் கூறினார். இதனிடையே, எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் மருந்துகளில் தற்போது 36,421 மாத்திரைகள் கையிருப்பில் இருப்பதாகவும், அது நான்கு மாதங்களுக்குப் போதுமானது என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார். எனவே அந்த நோய்களுக்கான மருந்துகளில் எவ்வித தட்டுப்பாடுகளும் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement