• Sep 20 2024

கோண்டாவில் இ.போ.ச பேருந்து மனைக்குள் அந்தோனியார் சிலையா? SamugamMedia

Tamil nila / Feb 16th 2023, 8:34 pm
image

Advertisement

அண்மையில், மாற்றலாகி வந்திருக்கின்ற கத்தோலிக்கரான மூத்த அதிகாரி ஒருவர் கோண்டாவில் பேருந்து மனைக்குள் அந்தோனியார் சிலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சி செய்து பிரதேச செயலகத்திலும் உரிமம் பெற்றுள்ளார்.


இன்று (16.2.2023) பிற்பகல் 2 மணியளவில் இலங்கை சிவசேனை மறவன்புலவு க.சச்சிதானந்தன் கோண்டாவில் முதன்மைப் பிராந்திய முகாமையாளர் திரு தர்மசேனன் அவர்களைச் சந்தித்தார்.


இதன் போது சிவசேனை மறவன்புலவு க.சச்சிதானந்தன் கோண்டாவில் முதன்மைப் பிராந்திய முகாமையாளர் திரு தர்மசேனன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கையில்,


கோண்டாவில், பேருந்து மனை தொடங்கிய காலம் முதலாகப் பல ஆண்டுகளுடாக இன்று வரை மத அடையாளங்களை எவரும் புகுத்த வில்லை.


சைவ மக்கள் செறிந்து வாழ்கின்ற பூமி கோண்டாவில், அங்கே பிற மத அடையாளங்கள் புகுவதை அவர்கள் விரும்புவதில்லை.


சைவத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் நடுவே அந்தோனியார் சிலையை வைக்க முயலாதீர்கள்.


பல்லாண்டுகள் ஊடாகப் பேருந்து மனைக்குள் மத அடையாளங்களைப் புகுத்துவதில்லை என்ற கோட்பாட்டையே தொடர்ந்தும் கடைப்பிடியுங்கள்.


சைவர்களின் கருத்தை அறிந்து அதற்கமைய அவர்களுக்கு இடையூறு இன்றி அவர்களுடைய எதிர்ப்பு இன்றி அந்தோனியார் சிலையை வைக்க முடியுமானால் வையுங்கள் என்றே பிரதேச சபை உங்களுக்கு உரிமம் தந்துள்ளது.


மத நல்லிணக்கமும் அமைதியும் எதிர்ப்புணர்வின்றியும் இருந்த இபோச ஊழியரிடையேயும் சுற்றி வாழ்கின்ற மக்களிடையேயும் அருவருக்கத்தக்க மதவெறுப்பையும் மதவாதத்தையும் தூண்டுவதைச் சிவ சேனை ஒருபொழுதும் ஒப்புக் கொள்ளாது.


கத்தோலிக்க கிறிஸ்தவ மத பரப்புனர்கள் அண்மைக்காலமாக முன்னெடுக்கின்ற Church Building as a prelude to conversion என்ற மதம் மாற்றும் வழிமுறைகளில் ஒன்றே அந்தோனியார் சிலையின் வைப்பு என்பதைச் சிவசேனை சுட்டிக்காட்டியது.


சைவ மக்களின் எதிர்ப்பையும் உணர்வையும் மீறி அந்தோனியார் சிலை பேருந்து பணி மனைக்குள் அமையுமாயின் கடுமையான போராட்டம் நடைபெறும் என்பதை மறவன்புலவு க சச்சிதானந்தன் முதன்மை பிரதி முகாமையாளரிடம் எடுத்துக் கூறினார்.

 


கோண்டாவில் இ.போ.ச பேருந்து மனைக்குள் அந்தோனியார் சிலையா SamugamMedia அண்மையில், மாற்றலாகி வந்திருக்கின்ற கத்தோலிக்கரான மூத்த அதிகாரி ஒருவர் கோண்டாவில் பேருந்து மனைக்குள் அந்தோனியார் சிலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சி செய்து பிரதேச செயலகத்திலும் உரிமம் பெற்றுள்ளார்.இன்று (16.2.2023) பிற்பகல் 2 மணியளவில் இலங்கை சிவசேனை மறவன்புலவு க.சச்சிதானந்தன் கோண்டாவில் முதன்மைப் பிராந்திய முகாமையாளர் திரு தர்மசேனன் அவர்களைச் சந்தித்தார்.இதன் போது சிவசேனை மறவன்புலவு க.சச்சிதானந்தன் கோண்டாவில் முதன்மைப் பிராந்திய முகாமையாளர் திரு தர்மசேனன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கையில்,கோண்டாவில், பேருந்து மனை தொடங்கிய காலம் முதலாகப் பல ஆண்டுகளுடாக இன்று வரை மத அடையாளங்களை எவரும் புகுத்த வில்லை.சைவ மக்கள் செறிந்து வாழ்கின்ற பூமி கோண்டாவில், அங்கே பிற மத அடையாளங்கள் புகுவதை அவர்கள் விரும்புவதில்லை.சைவத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் நடுவே அந்தோனியார் சிலையை வைக்க முயலாதீர்கள்.பல்லாண்டுகள் ஊடாகப் பேருந்து மனைக்குள் மத அடையாளங்களைப் புகுத்துவதில்லை என்ற கோட்பாட்டையே தொடர்ந்தும் கடைப்பிடியுங்கள்.சைவர்களின் கருத்தை அறிந்து அதற்கமைய அவர்களுக்கு இடையூறு இன்றி அவர்களுடைய எதிர்ப்பு இன்றி அந்தோனியார் சிலையை வைக்க முடியுமானால் வையுங்கள் என்றே பிரதேச சபை உங்களுக்கு உரிமம் தந்துள்ளது.மத நல்லிணக்கமும் அமைதியும் எதிர்ப்புணர்வின்றியும் இருந்த இபோச ஊழியரிடையேயும் சுற்றி வாழ்கின்ற மக்களிடையேயும் அருவருக்கத்தக்க மதவெறுப்பையும் மதவாதத்தையும் தூண்டுவதைச் சிவ சேனை ஒருபொழுதும் ஒப்புக் கொள்ளாது.கத்தோலிக்க கிறிஸ்தவ மத பரப்புனர்கள் அண்மைக்காலமாக முன்னெடுக்கின்ற Church Building as a prelude to conversion என்ற மதம் மாற்றும் வழிமுறைகளில் ஒன்றே அந்தோனியார் சிலையின் வைப்பு என்பதைச் சிவசேனை சுட்டிக்காட்டியது.சைவ மக்களின் எதிர்ப்பையும் உணர்வையும் மீறி அந்தோனியார் சிலை பேருந்து பணி மனைக்குள் அமையுமாயின் கடுமையான போராட்டம் நடைபெறும் என்பதை மறவன்புலவு க சச்சிதானந்தன் முதன்மை பிரதி முகாமையாளரிடம் எடுத்துக் கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement