• May 12 2024

இலங்கை அரசு இதுவரை பெற்றுள்ள கடன் தொகை இவ்வளவா..?? - புட்டு புட்டு வைத்த பேராசிரியர்! samugammedia

Chithra / May 20th 2023, 12:09 pm
image

Advertisement

இலங்கையில் உள்ள அனைவரும் தற்போது பாரிய அளவில் கடனாளிகளாக மாறியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இதுவரையில் பெற்ற கடன்கள் அடிப்படையில் இந்த தகலை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இதுவரையில் பெற்றுக்கொண்ட மொத்த கடன் தொகை இருபத்தி ஒன்பது இலட்சத்து எண்பத்து ஐந்தாயிரத்து அறுநூறு கோடி ரூபாவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் கருவூல உண்டியல்கள் மூலம் இரண்டு இலட்சத்து எண்பத்தாறாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தி இரண்டு கோடி ரூபாவும், கருவூல உண்டியல்கள் மூலம் இரண்டு இலட்சத்து எண்பத்தாறாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தி இரண்டு கோடி ரூபாவும் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார். 

கருவூலப் பத்திரங்களில் இருந்து ஆயிரத்து நூற்று நாற்பது கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

இதேவேளை, திறைசேரி உண்டியல்கள் மூலம் பெறப்படும் கடன்களின் வருடாந்த அதிகரிப்பு எண்பத்தி ஒரு வீதமாக அதிகரித்துள்ளதாகவும் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட கடன்களின் வளர்ச்சி 25 வீதமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு கடன் சுமை நாளொன்றுக்கு நூற்றி ஏழு கோடி ரூபாவால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையும் காட்டுவதாக வசந்த அத்துகோரல தெரிவித்தார்.

கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் நாட்டின் உள்நாட்டுக் கடன் 150 வீதத்தால் அதிகரித்துள்ளதாகக் கூறும் பேராசிரியர், திறைசேரி உண்டியல் கடன் 450 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


பிணைமுறிக் கடன்கள் 110 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறுகிய கால திறைசேரி உண்டியல் கடன்கள் முதிர்ச்சியடைவதால் இந்த கடன்களை பெற்று கடன்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் 

இதன் காரணமாக உள்நாட்டு கடனில் மிகவும் நிலையற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இலங்கை அரசு இதுவரை பெற்றுள்ள கடன் தொகை இவ்வளவா. - புட்டு புட்டு வைத்த பேராசிரியர் samugammedia இலங்கையில் உள்ள அனைவரும் தற்போது பாரிய அளவில் கடனாளிகளாக மாறியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.அரசாங்கம் இதுவரையில் பெற்ற கடன்கள் அடிப்படையில் இந்த தகலை அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கம் இதுவரையில் பெற்றுக்கொண்ட மொத்த கடன் தொகை இருபத்தி ஒன்பது இலட்சத்து எண்பத்து ஐந்தாயிரத்து அறுநூறு கோடி ரூபாவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் கருவூல உண்டியல்கள் மூலம் இரண்டு இலட்சத்து எண்பத்தாறாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தி இரண்டு கோடி ரூபாவும், கருவூல உண்டியல்கள் மூலம் இரண்டு இலட்சத்து எண்பத்தாறாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தி இரண்டு கோடி ரூபாவும் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்தார். கருவூலப் பத்திரங்களில் இருந்து ஆயிரத்து நூற்று நாற்பது கோடி ரூபாய் கிடைத்துள்ளது.இதேவேளை, திறைசேரி உண்டியல்கள் மூலம் பெறப்படும் கடன்களின் வருடாந்த அதிகரிப்பு எண்பத்தி ஒரு வீதமாக அதிகரித்துள்ளதாகவும் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட கடன்களின் வளர்ச்சி 25 வீதமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.உள்நாட்டு கடன் சுமை நாளொன்றுக்கு நூற்றி ஏழு கோடி ரூபாவால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையும் காட்டுவதாக வசந்த அத்துகோரல தெரிவித்தார்.கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் நாட்டின் உள்நாட்டுக் கடன் 150 வீதத்தால் அதிகரித்துள்ளதாகக் கூறும் பேராசிரியர், திறைசேரி உண்டியல் கடன் 450 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.பிணைமுறிக் கடன்கள் 110 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குறுகிய கால திறைசேரி உண்டியல் கடன்கள் முதிர்ச்சியடைவதால் இந்த கடன்களை பெற்று கடன்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக உள்நாட்டு கடனில் மிகவும் நிலையற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement