• Apr 28 2024

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெறமுடியுமா?..! ஆராயும் மைத்திரி.!samugammedia

Sharmi / May 20th 2023, 12:14 pm
image

Advertisement

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சர்களை மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் இந்தக் கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, ஜகத் புஷ்பகுமார மற்றும் லசந்த அழகியவண்ண உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளதோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர, ஷான் விஜயலால் டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

தங்களுக்கான உறுப்புரிமை தடையை நீக்குமாறும் கட்சியுடன் இணைந்து மீண்டும் செயல்பட தயாராகவுள்ளதாகவும் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட அமைச்சர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியில் இருக்கும்போது அதன் உறுப்பினர்களால் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெறமுடியுமா? என இதன்போது சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

மேலும், சுதந்திரக் கட்சிக்கு மீண்டும் வருவதாக இருந்தால் அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளில் இருந்துகொண்டு இவற்றை செய்ய முடியாது எனவும் சுதந்திர கட்சியினர் அமைச்சர்களுக்கு எடுத்துரைத்துள்ளனர்.

இதேவேளை, இந்த கலந்துரையாடல் எந்தவிதமான இணக்கபாடுமின்றி முடிவடைந்துள்ளதாக அறிய முடிகிறது.

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெறமுடியுமா. ஆராயும் மைத்திரி.samugammedia அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சர்களை மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் இந்தக் கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றுள்ளது.இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, ஜகத் புஷ்பகுமார மற்றும் லசந்த அழகியவண்ண உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளதோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர, ஷான் விஜயலால் டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.தங்களுக்கான உறுப்புரிமை தடையை நீக்குமாறும் கட்சியுடன் இணைந்து மீண்டும் செயல்பட தயாராகவுள்ளதாகவும் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட அமைச்சர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியில் இருக்கும்போது அதன் உறுப்பினர்களால் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெறமுடியுமா என இதன்போது சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.மேலும், சுதந்திரக் கட்சிக்கு மீண்டும் வருவதாக இருந்தால் அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளில் இருந்துகொண்டு இவற்றை செய்ய முடியாது எனவும் சுதந்திர கட்சியினர் அமைச்சர்களுக்கு எடுத்துரைத்துள்ளனர்.இதேவேளை, இந்த கலந்துரையாடல் எந்தவிதமான இணக்கபாடுமின்றி முடிவடைந்துள்ளதாக அறிய முடிகிறது.

Advertisement

Advertisement

Advertisement