• Sep 08 2024

சாய்ந்த மருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைவு!

Tamil nila / Jul 26th 2024, 10:50 pm
image

Advertisement

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட செயற் குழு கூட்டம் இன்று  கல்முனையில் இடம்பெற்றது.

இதன் போது கடந்த காலங்களில் தேசிய காங்கிரசில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து கொள்வதற்கான முனைப்புடன் அம்பாரை மாவட்ட செயற்குழுவுடன் சினேகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நாளை  புத்தளம் பிரதேசத்தில் இடம்பெறவுள்ள "புத்தளம் எழுச்சி மாநாட்டில்" வைத்து கட்சியோடு உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழு தலைவரும் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளருமான அப்துல் றஷாக் , கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர், கட்சியின் பிரதி செயலாளரும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருமான அன்சில், கட்சியின் வெளிநாட்டு விவகரங்களுக்கான பணிப்பாளர் மாஹிர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களெனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சாய்ந்த மருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட செயற் குழு கூட்டம் இன்று  கல்முனையில் இடம்பெற்றது.இதன் போது கடந்த காலங்களில் தேசிய காங்கிரசில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து கொள்வதற்கான முனைப்புடன் அம்பாரை மாவட்ட செயற்குழுவுடன் சினேகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்.அதனைத் தொடர்ந்து நாளை  புத்தளம் பிரதேசத்தில் இடம்பெறவுள்ள "புத்தளம் எழுச்சி மாநாட்டில்" வைத்து கட்சியோடு உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழு தலைவரும் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளருமான அப்துல் றஷாக் , கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர், கட்சியின் பிரதி செயலாளரும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருமான அன்சில், கட்சியின் வெளிநாட்டு விவகரங்களுக்கான பணிப்பாளர் மாஹிர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களெனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement