• Sep 08 2024

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் 12 பேர் கைது!

Tamil nila / Jul 26th 2024, 7:22 pm
image

Advertisement

ஜூலை 22 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையான 5 நாட்களின் காலப்பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் 12 மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டார், நியூசிலாந்து, மலேசியா, ருமேனியா, கனடா ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய  5 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி நியூசிலாந்தில் வேலை வாய்ப்புக்கான நேர்முகப் பரீட்சைகளை நடாத்திய குருநாகலில் உள்ள சட்டவிரோத முகவர் நிறுவனம் ஒன்றும் சோதனையிடப்பட்டதுடன், அங்கு இருந்த 108 கோப்புகளும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் 12 பேர் கைது ஜூலை 22 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையான 5 நாட்களின் காலப்பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் 12 மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கட்டார், நியூசிலாந்து, மலேசியா, ருமேனியா, கனடா ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய  5 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி நியூசிலாந்தில் வேலை வாய்ப்புக்கான நேர்முகப் பரீட்சைகளை நடாத்திய குருநாகலில் உள்ள சட்டவிரோத முகவர் நிறுவனம் ஒன்றும் சோதனையிடப்பட்டதுடன், அங்கு இருந்த 108 கோப்புகளும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement