சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் நாட்டின் பல பகுதிகளிலும் பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் ஊர்காவற்துறை கண்ணகி அம்மன் கோவில் துறைமுகப் பகுதியில் விழிப்புணர்வு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "பாரம்பரிய மீனவர்களின் கடற்றொழிலை பாதிக்கும் அட்டைப் பண்ணையை உடன் நிறுத்து,
மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே, மீனவர்களை வாழவிடு" என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினரின் ஒருங்கிணைப்பில், பொது அமைப்புகள்,
ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதேவேளை முல்லைத்தீவு - மாங்குளம் பிரதான வீதியோரத்தில் சுற்றுலா பகுதியாக அபிவிருத்தி செய்யப்படும் பகுதியில் மரநடுகை திட்டத்தை முன்னெடுத்தனர்.
சுற்றுலா தளமாக அபிவிருத்தி செய்யப்படும் நீர் நிலையை சுற்றிலும் இலுப்பை மற்றும் பூமரக் கன்றுகள் நாட்டப்பட்டது
இந்நிகழ்வில் கரைதுறைபற்று பிரதேச செயலாளர் மணிவண்ணன் உமாமகள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியக பணியாளர்கள், கிராம அலுவலர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
மேலும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக வாகன புகை பரிசோதனை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிசார் இணைந்து இன்று குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதன்போது, A9 வீதியால் பயணித்த முச்சக்கர வண்டிகள், பேருந்துகள், பாரஊர்திகள் என அனைத்து வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டங்கள் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் நாட்டின் பல பகுதிகளிலும் பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.அந்தவகையில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் ஊர்காவற்துறை கண்ணகி அம்மன் கோவில் துறைமுகப் பகுதியில் விழிப்புணர்வு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "பாரம்பரிய மீனவர்களின் கடற்றொழிலை பாதிக்கும் அட்டைப் பண்ணையை உடன் நிறுத்து, மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே, மீனவர்களை வாழவிடு" என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினரின் ஒருங்கிணைப்பில், பொது அமைப்புகள், ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.இதேவேளை முல்லைத்தீவு - மாங்குளம் பிரதான வீதியோரத்தில் சுற்றுலா பகுதியாக அபிவிருத்தி செய்யப்படும் பகுதியில் மரநடுகை திட்டத்தை முன்னெடுத்தனர். சுற்றுலா தளமாக அபிவிருத்தி செய்யப்படும் நீர் நிலையை சுற்றிலும் இலுப்பை மற்றும் பூமரக் கன்றுகள் நாட்டப்பட்டது இந்நிகழ்வில் கரைதுறைபற்று பிரதேச செயலாளர் மணிவண்ணன் உமாமகள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியக பணியாளர்கள், கிராம அலுவலர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்மேலும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக வாகன புகை பரிசோதனை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிசார் இணைந்து இன்று குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்தனர்.இதன்போது, A9 வீதியால் பயணித்த முச்சக்கர வண்டிகள், பேருந்துகள், பாரஊர்திகள் என அனைத்து வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.