• May 15 2026

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் எதிரொலி - மசகு எண்ணெய் விலை உயர்வு...!

Oil
shanu / Jun 16th 2025, 9:51 am
image

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராணுவ  தாக்குதல் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.


அதன்படி, இன்று (16) ஒரு பீப்பாய் WIT மசகு எண்ணெயின் விலை $77.08 ஆகவும், பிரெண்ட் மசகு எண்ணெயின் பீப்பாய் $75.37 ஆகவும் விற்கப்பட்டது.


இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல்கள்  ஆரம்பிப்பதற்கு முன்னர் 12 ஆம் திகதி உலக சந்தையில் ஒரு பீப்பாய் WIT மசகு எண்ணெயின் விலை $68.04 ஆக பதிவாகியிருந்தது. அதே நேரத்தில் ஒரு பீப்பாய் Brent மசகு எண்ணெய் $69.24 ஆக விற்கப்பட்டது.


அதன்படி, கடந்த வாரத்தில் உலக சந்தையில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் போர் நிலைமை தொடர்ந்தால், உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். 


மேலும் இது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் எதிரொலி - மசகு எண்ணெய் விலை உயர்வு. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராணுவ  தாக்குதல் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.அதன்படி, இன்று (16) ஒரு பீப்பாய் WIT மசகு எண்ணெயின் விலை $77.08 ஆகவும், பிரெண்ட் மசகு எண்ணெயின் பீப்பாய் $75.37 ஆகவும் விற்கப்பட்டது.இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல்கள்  ஆரம்பிப்பதற்கு முன்னர் 12 ஆம் திகதி உலக சந்தையில் ஒரு பீப்பாய் WIT மசகு எண்ணெயின் விலை $68.04 ஆக பதிவாகியிருந்தது. அதே நேரத்தில் ஒரு பீப்பாய் Brent மசகு எண்ணெய் $69.24 ஆக விற்கப்பட்டது.அதன்படி, கடந்த வாரத்தில் உலக சந்தையில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் போர் நிலைமை தொடர்ந்தால், உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். மேலும் இது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement